For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துலாமிலிருந்து விருச்சிகத்துக்கு இடம்பெயர்ந்தார் சனி பகவான்: திருநள்ளாற்றில் சிறப்பு பூஜைகள்

Google Oneindia Tamil News

காரைக்கால்: இன்று சரியாக பிற்பகல் 2.43 மணிக்கு சனிபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் காக்கை வாகனன். இதனையடுத்து திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரண்டு சனிபகவானின் அருள் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து திருநள்ளாறு கோவிலில் வசந்தமண்டபத்தில் அருள் பாலித்து வருகின்ற பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உலகப்புகழ்பெற்ற சனிபகவான் தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக, தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Karaikal thirunallar Saneeswaran temple festival

உலகிலேயே சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற ஒரே தலம் திருநள்ளாறு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நவக்கிரகங்களில் ஒன்றான சனிக்கிரகத்திற்கு மந்த கிரகம் என்ற பெயரும் உண்டு. இந்த கிரகத்தின் அதிபதியான சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதுவே இத்திருத்தலத்தில் சனிப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கோவிலுக்கு அடுத்தபடியாக நளதீர்த்தக் குளத்தில்தான் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும். முன்பு இத்திருக்குளத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் வரைதான் குளிக்க முடிந்தது.

Karaikal tirunalaru Saneeswaran temple festival…

ஆனால் தற்பொழுது குளம் அழகுபடுத்தப்பட்டு ஒரே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரை புனித நீராடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குளத்தில் நீராடி, சனீஸ்வரனின் அருள் பெற்று மனமகிழ்ச்சியுடன் தரிசனத்தில் ஈடுபட்டுள்ளனர் கோடான கோடி பக்தர்கள் திருநள்ளாறில்.

சனிப்பெயர்ச்சி 27 நட்சத்திரங்களுக்கு பலன்கள்: டிச.16,2014 முதல் டிச.16, 2014 முதல் டிச.11, 2017 வரைசனிப்பெயர்ச்சி 27 நட்சத்திரங்களுக்கு பலன்கள்: டிச.16,2014 முதல் டிச.16, 2014 முதல் டிச.11, 2017 வரை

திருக்கணித பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள்: நவ.02, 2014 முதல், அக். 25, 2017 வரைதிருக்கணித பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள்: நவ.02, 2014 முதல், அக். 25, 2017 வரை

English summary
SANIPEYARCHI festival hel in Tirunallaru Saneeswarar temple today. More than lakhs of pilgrims arrived to Tirunalaru temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X