For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேள தாளத்துடன் இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய பெற்றோர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 09.06.2018 கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 09.06.2018 கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர்கள் பொருட்களை மேளதாளத்துடன் , பூ, பழங்களுடன், பட்டாசு வெடியுடன் சீராக பள்ளிக்கு கொடுத்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. ஆசிரியர்கள் , சீர் எடுத்து வந்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இந்த விழாவிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் திரு. மாரிமுத்து அவர்கள் தலைமையேற்றார். தலைமையாசிரியர் திரு.ஆ. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

Karaikudi School gets ‘Kalvi Seer’ to increase patronage

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. சகாய அமலன் அவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி.அழகு சுந்தரி அவர்கள், பெற்றோர் சார்பில் திரு. கலைமணி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் டெஸ்க் மற்றும் பெஞ்ச், வெண் பலகை , ஸ்டீல் ஸ்டூல், பிளாஸ்டிக் ஸ்டூல், பிளாஸ்டிக் வாலி, குப்பை தொட்டி, சதுரங்க அட்டை, பிரிண்டர், மடிகணினி, கணினி மேஜை, மானிட்டர், பிளாஸ்டிக் சேர், சுவர் கடிகாரம், புரஜெக்டர் ஸ்க்ரீன், ஸ்டீல் அலமாரி, போன்ற மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்விச்சீராக பள்ளிக்கு வழங்க மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

பெற்றோர்கள் பொருட்களை மேளதாளத்துடன் , பூ, பழங்களுடன், பட்டாசு வெடியுடன் சீராக பள்ளிக்கு கொடுத்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. ஆசிரியர்கள் , சீர் எடுத்து வந்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Karaikudi School gets ‘Kalvi Seer’ to increase patronage

பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதிஜெயம் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தனர்.

English summary
The parent-teacher association of a Ramanathan chettiyar high school Karaikudi has come up with the idea of ‘Kalvi Seer’, a verbatim translation of which would mean education gift, to give facelift to the school by improving its infrastructure to woo more students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X