For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவு அநியாயத்தின் உச்சக்கட்டம்: ஜி.கே. வாசன்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவு அநியாயத்தின் உச்சக்கட்டம்: ஜி.கே. வாசன்- வீடியோ

    சென்னை: கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செல்ல இருப்பதும், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக குரல் எழுப்பி போராட இருப்பதும் அநியாயத்தின் உச்சக்கட்டம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    Karnataka government decision to appeal against Cauvery water authority is not fair: GK Vasan

    கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செல்ல இருப்பதும், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக குரல் எழுப்பி போராட இருப்பதும் அநியாயத்தின் உச்சக்கட்டம்.

    கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, சட்டத்துக்கு மாறாக தன்னிச்சையாக செயல்படும் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு, வரும் 15 ஆண்டுகளுக்கு எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்று இறுதியாக, முடிவாக அறிவித்த பிறகும் கர்நாடக அரசு மேலாண்மை ஆணையத்தை எதிர்ப்பதும், மேல் முறையீட்டுக்கு செல்ல இருப்பதும் சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும் எதிரானது.

    எனவே, மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் இனியும் கால தாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக முறைப்படி செயல்படுத்தி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பங்கிட்டு வழங்க வேண்டும். தமிழக அரசும் எம்.பி.க்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    English summary
    TMC chief GK Vasan said in a statement that Karnataka government's decision to appeal in the supreme court against Cauvery water authority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X