For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பால் வருத்தம்.. அறிவிக்கப்பட்ட நீரையாவது உடனடியாக வழங்கவேண்டும்.. தமிழிசை!

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வருத்தமளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அறிவிக்கப்பட்ட நீரையாவது உடனடியாக வழங்கவேண்டும்.. தமிழிசை!- வீடியோ

    சென்னை: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வருத்தமளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    காவிரி வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கான நீரை குறைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கான நீர் குறைக்கப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    Karnataka should give the water immediately to Tamilnadu : Tamilisai

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்திற்கான பங்கை குறைக்கும் உத்தரவை தமிழக பாஜக வரவேற்கவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்துக்கான பங்கு கிடைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்துள்ள 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    English summary
    Tamil Nadu BJP leader Tamilisai is not welcoming the judgement of Supreme court. Tamilisai says the Karnataka should give the water immediately to Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X