For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யூ.. சீ.. அங்க 10, இங்க 4.. மொத்தம் 14.. நாம வெல்றோம்...டெல்லியில் 'தொப்பி' கார்த்திக் கில்லி பேச்சு

|

சென்னை: நடிகர் கார்த்திக் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் டைரக்டாக பேசினால் வேலைக்கு ஆகாது என்று தெரியாத்தனமாக புத்திசாலித்தனமான முடிவெடுத்து டெல்லி வரை பறந்து போய் அகமது படேலைப் பார்தது ஆற அமர தனது பலத்தைச் சொல்லி விளக்கி விட்டுத்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் பக்கவாக என்ட்ரி கொடுத்தாராம்.

ஆனால் அவர் அகமது படேலிடம் பேசிய பேச்சுத்தான் ரெம்ப கில்லாடித்தனமாக இருக்கிறது.. அப்படி ஒரு புள்ளி விவரத்தை படேலிடம் சொல்லி அவரை புல்லரிக்க வைத்து விட்டாராம் கார்த்திக்.

ஆனால் கார்த்திக் கேட்கிறார என்பதற்காக அவருக்கு மதுரையையெல்லாம் கொடுக்க முடியாது என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முறைத்து நிற்கிறாராம் ஞானதேசிகன்.

படேல்ஜி... ஐ வில் டெல் யூ ஏ கணக்கு..

படேல்ஜி... ஐ வில் டெல் யூ ஏ கணக்கு..

டெல்லிக்குப் போன கார்த்திக் அங்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் அகமது படேலைப் பார்த்து ஒரு கணக்கை கூறியுள்ளார்.

என்னைய சேத்துக்கிட்டா...

என்னைய சேத்துக்கிட்டா...

அதாவது அவரை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் தென் மாவட்டங்களில் ஒரு பத்தும், மேற்கு மாவட்டங்களில் ஒரு நாலும் என மொத்தம் 14 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி என்று கூலிங் கிளாஸை நெற்றிக்கு மேல் லைட்டாக ஏற்றி விட்டபடி சீரியஸாகவேப் பேசினாராம் கார்த்திக்.

டீடெய்ல் வேணுமா டீட்டெய்ல்...

டீடெய்ல் வேணுமா டீட்டெய்ல்...

அதை விட முக்கியமாக தனக்கும், சோனியாவுக்கும் இடையே சந்திப்புக்கு ஏற்பாடு செய்தால் மேற்கொண்டு விலாவாரியாக பேசத் தயாராக இருப்பதாகவும் படேலிடம் கூறி பதறடித்தாராம்.

அன்னையே.. கார்த்திக்குங்குற நடிகர்ர்ர்ர்...

அன்னையே.. கார்த்திக்குங்குற நடிகர்ர்ர்ர்...

கார்த்திக் பேசியதை வெள்ளந்தி போல கேட்டுக கொண்ட படேல், சோனியாவை அணுகி கார்த்திக் என்கிற நடிகர் ஒருவர் சென்னையிலிருந்து வந்துள்ளார் என்று சொல்லப் போக, தலைமையோ, அதெல்லாம் ஞானதேசிகனை விட்டு பேசச் சொல்லுங்க என்று பதில் வந்ததாம்.

மச்சி நீ கேளேன்...

மச்சி நீ கேளேன்...

சரியென்று சென்னைக்கு வந்த கார்த்திக், தொப்பியை சரி செய்தபடி ஞானதேசிகனுடன் பேச உட்கார்ந்தார். படேலிடம் சொன்ன அதே கதையை ஞானத்திடமும் எடுத்து விட்டார்.

தேனி மதுரை நெல்லை.. எல்லாமே நம்ம ஜில்லா

தேனி மதுரை நெல்லை.. எல்லாமே நம்ம ஜில்லா

எல்லாத்தையும் சொன்ன பிறகு, தேனி, மதுரை, நெல்லை எங்களுக்குக் கொடுங்க. நீங்க கொடுக்கிறது 3தான். ஆனால் நான் உங்களை 10 தொகுதிகளில் ஜெயித்துக் காட்டுகிறேன் எனறு கார்த்திக் சொன்னபோது ஞானத்திற்கே பதட்டமாகி விட்டதாம்.

இதோ பாருங்க தம்பி...

இதோ பாருங்க தம்பி...

கார்த்திகை ஆறப்படுத்தி அமர்த்தி நிதானமாக பேசி விளக்கினாராம் ஞானதேசிகன். அதாவது 38 சீட்டுக்கு ஆளைப் போட்டாச்சு கார்த்திக். தென் சென்னைதான் மிச்சம். நீங்க பேசாம அங்க நில்லுங்க, பார்த்துக்கலாம் என்றாராம்.

ஹேய்.. வாட் மேன்... ஒன்லி மடுரை..

ஹேய்.. வாட் மேன்... ஒன்லி மடுரை..

இதைக் கேட்டு கார்த்திக்கே ஷாக் ஆகி விட்டாராம். என்னங்க நீங்க.. அதெல்லாம் இல்லை மதுரை மட்டுமாவது வேண்டும். தேனி, நெல்லை கூட வேணாம். ஆனால் மதுரை கண்டிப்பாக வேணும். தென் சென்னை எதுக்கு என்று கூறினாராம்...

அதற்குப் பிறகு ஞானம் பேசவில்லையாம். பேசாமல் இருந்து விட்டாராம். கார்த்திக்கும் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் கிளம்பி வந்து விட்டாராம்.

English summary
Actor and AINMK leader Karthick had initially demanded 3 seats from the Congress. But the party had offered only South Chennai. So the talks are inconclusive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X