For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உட்பட 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு- பட்டியலிட்ட பயோனீர்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ஆதாயம் அடைந்த பணத்தின் மூலம் சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உட்பட 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் செய்த முதலீடுகளை தி டெய்லி பயோனீர் ஆங்கில நாளேடு விரிவாக பட்டியலிட்டுள்ளது.

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் இணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இருந்து இந்த செய்தியை பயோனீர் நாளேடு வெளியிட்டுள்ளது.

Karti Chidambaram built massive empire overseas?

பயோனீர் நாளேட்டின் இந்த செய்திக்குதான் கார்த்தி சிதம்பரம் நேற்று 4 வரி விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயோனீர் நாளேட்டில் வெளியாகி இருந்த செய்தி விவரம்:

  • ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், பண பரிவர்த்தனைக்கு உதவியாக இருந்தது கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரடேஜிக் கன்சல்டிங் நிறுவனம். இதில் நடத்தப்பட்ட சோதனைகளில் 14 நாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
  • சிங்கப்பூர், துபாய், தென்ஆப்ரிக்கா, லண்டன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ் என உலகின் 14 இடங்களில் முதலீடு செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
  • 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரடேஜிக் கன்சல்டிங் தொடங்கப்பட்டது.
  • இந் நிறுவனம் கேம்ப்ரிட்ஜை சேர்ந்த ஏர்டிவியா நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.
  • லண்டனை சேர்ந்த ஓபன்ஹெய்மர் நிறுவனத்துடனும் பண பரிவர்த்தனை தொடர்பு வைத்துள்ளது.
  • இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள லங்கா ஃபார்ச்சூன் ஹோட்டலின் பெரும்பகுதி பங்குகளையும் வாங்கியுள்ளது.
  • இலங்கையின் தி வாட்டர்ஃப்ரோன்ட், வெலிகாமா பே ரிசோர்ட், எமரால்ட் பே ஹோட்டல்களும் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரடேஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்குத்தான் சொந்தம்.
  • இலங்கையை சேர்ந்த யூனியன் டெவலப்மென்ட் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி மூலமே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவின் வினியார்ட்ஸ் என்ற இடத்தில் கேப் ஆர்ச்சிட்ஸ், வினியார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், சேன்ட்விலிட் என்டர்பிரைசஸ் பண்ணை வீடுகளை வாங்க துபாய் வழியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவின் நிகோல்ஸ் ஸ்டெயின் அண்டு அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்தும் பணபரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறது.
  • துபாய் டெசர்ட் ட்யூன்ஸ் பிராபர்ட்டிஸ் நிறுவனம், 'பேர்ல் துபாய்' ஆகியவற்றுடன் கார்த்தி நிறுவனத்துக்கு பணவரித்தனை இருந்தது.
  • பிலிப்பைன்ஸ் நிறுவனங்களான எஸ்.எம். ஏரானா ஸ்போர்ட்ஸ் கார்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச இந்தியன் பிரீமியர் லீக் டென்னிஸ் தொடரில் விளையாடி வரும் அணியை, கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
  • கிரேவிட்டாஸ் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து, கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் 'மணிலா மாவ்ரிக்ஸ்' என்ற டென்னிஸ் அணியையும் வாங்கியுள்து.
  • கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனமான தி அட்வான்டேஜ், மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான ரியல் பேயாண்ட் நிறுவனத்துடன் பணபரிவர்த்தனை தொடர்பு கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு மலேசியாவில் 3 துணை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனம், மலேசியாவில் 16 இடங்களில் நிலங்களை வாங்கிப் போட்டுள்ளது.
  • பிரிட்டிஷ் விர்ஜின் தீவுப் பகுதியில் சோமர்செட் என்ற இடத்தில், சோமர்செட் ஸ்டர்ரிட்ஜ் லிமிடெட் என்ற பெயரில், ஃபுல் இன்னாவேசன்ஸ் என்ற நிறுவனத்தில் 4 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
  • சுவிட்சர்லாந்தின் ஜீபன் டிரேடிங் நிறுவனத்துடன் பண பரிவர்த்தனை தொடர்பு கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் கருப்பு பண பதுக்கலுக்கு பெயர் பெற்ற வங்கியான யு.பி.எஸ். வழியாகவே இந்த நிறுவனம் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் நடத்தியுள்ளது.
  • மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான 'யூனிசன் குளோபர் இன்வெஸ்ட்மென்ட்' நிறுவனத்தில், 5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
  • மலேசியாவில் 1.9 மலேசிய ரிங்கிட்டுகள் மதிப்பிலான பெனிசூலா கபே என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்கப்பட்டுள்ளது.
  • மலேசியாவில் கஃபே காபி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2012-ம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் 'அட்வான்டேஸ் எஸ்டேடஜிவா ஸ்போர்ட்டிவா 'என்ற துணை நிறுவனத்தை கார்த்தி சிதம்பரம் தொடங்கியுள்ளார்.
  • இது ஒரு டென்னிஸ் விளையாட்டு அகாடமி ஆகும். 4 ஏக்கர் பரப்பளவில் 7 டென்னிஸ் கோர்ட்டுகள் இதில் அமைந்துள்ளன.
  • பிரான்சை சேர்ந்த' பெம்ப்லான் ஆர்கனைஷேஸன்', கிரீஸ் தலைநகர் ஏதென்சில் இயங்கி வரும் 'பிசானி ஜான் ஸ்கெல்லர்ஸ்' நிறுவனத்துடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது
  • சென்னையில் செயல்படும் கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனம், ஏர்செல் டெலிவென்ச்சர்ஸ், டிசிபி கிளையன்ட், டியாஜியோ ஸ்காட்லாந்து லிமிடெட், கத்ரா குழுமம், இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு மையம், யூனிஃபை வெல்த் மேனேஜ்மென்ட், வி.எஸ்.டி டில்லர் டிராக்டர்ஸ், கார்ல்ட்ன் டிரேடிங் கம்பெனி, கிளாரிஸ் லைஃப் சயின்சஸ், ஐ.டி.சி சென்டர், பெஸ்ட் லேண்ட் ரியாலிட்டி லிமிடெட், எஸ்ஸார் ஸ்டீல் லிமிடெட், கோகுல்ஸ் பில்டர்ஸ் அண்டு எஸ்டேட்ஸ், எஸ். குமார்ஸ், ஐ.என்.எஸ் மீடியா,ரிஃப்ளெக்சன்ஸ், தியாகராஜர் மில்ஸ், சாக் சஃப்ட், ஈ.எல். ஃபோர்ஜ் லிமிடெட் போன்ற நிறுவனங்களுடன் பணபரிவர்த்தனை மேற்கொண்டுள்ளது.
  • 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னரே இவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பயோனீர் நாளேடு தெரிவித்துள்ளது.

English summary
According to a report in The Daily Pioneer, Former Finance Minister P Chidambaram's son Karti Chidambaram built a massive empire for himself through investments in real estate and other financial dealings across the world, according to documents recovered in the recent joint raids carried by the Enforcement Directorate and Investigation Wing of Income Tax in relation to the Aircel-Maxis scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X