For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து 13 தேர்தல்களில் வெற்றி.. தோல்வி காணாத நாயகன் கருணாநிதி! 699 வாக்குகளில் கூட வென்றார்

வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்ற ஒரு தேர்தலில் கூட கருணாநிதியின் வெற்றியை எதிரணியினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தொடர்ச்சியாக 13 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே காணாத வெற்றி நாயகன் கலைஞர் மு.கருணாநிதி. வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்ற ஒரு தேர்தலில் கூட கருணாநிதியின் வெற்றியை எதிரணியினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

1957, குளித்தலையில் ஆரம்பித்த அவர் பயணம், 2016ல் திருவாரூர் வரை மாரத்தான் போல தொடர்ந்தது. அதுகுறித்த ஒரு பார்வை:

1957- குளித்தலை தொகுதியில் முதல் முறை களம் கண்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

Karunanidhi 13 straight record win in Assembly elections

1962- தஞ்சாவூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

1967- சைதாப்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.

1971- சைதாப்பேட்டை தொகுதியில் தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கருணாநிதி. போட்டியிட்ட 201 இடங்களில் 183 இடங்களை பெற்று ஆட்சியமைத்தது திமுக.

Karunanidhi 13 straight record win in Assembly elections

1977- அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

1980- அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்து 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதுதான் கருணாநிதி இதுவரை பெற்றதிலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்திலான வெற்றி.

1989- துறைமுகம் தொகுதியில் முஸ்லீம் லீக்கின் வஹாப்பை 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

1991- ராஜிவ்காந்தி படுகொலையை தொடர்ந்து நடந்த தேர்தல் இது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்புவை 890 வாக்குகளில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுகவில் கருணாநிதியையும் சேர்த்து மொத்தமே இருவர்தான் (மற்றொருவர் எழும்பூரில் போட்டியிட்ட, பரிதி இளம்வழுதி) வெற்றி பெற்றனர்.

1996- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்

2001- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2006- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

2011 - திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2016- திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். இது அவரின் அரசியல் வாழ்க்கையில் பெற்ற பெரிய வெற்றியாகும். இத் தேர்தலில், திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றபோதிலும் கூட, மாநிலத்திலேயே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றதும் கருணாநிதிதான்.

English summary
The former Chief Minister and DMK president M. Karunanidhi maintain a clean slate in the Assembly elections thereby recording his 13th straight victory since 1957.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X