For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில் திமுக தோல்வி அடைய கருணாநிதியே காரணம்: சொல்கிறார் சு.சாமி

By Siva
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தான் காரணம் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று திமுக எதிர்பார்த்தது. ஆனால் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Karunanidhi is the reason for DMK's loss in polls: Swamy

தமிழக சட்டசபை வரலாற்றிலேயே இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு கட்சி எதிர்க்கட்சியாகியுள்ளது இதுவே முதல் முறை என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படும் என அக்கட்சி தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கு கருணாநிதி தான் காரணம். அவர் மட்டும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்றார்.

English summary
BJP leader Subramanian Swamy said that DMK supremo Karunanidhi is the reason for his party's loss in the assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X