For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி நினைவேந்தலுக்கு வரும் அமித் ஷா.. கோபத்தில் ராகுல் காந்தி.. கூட்டணி மாறுகிறதா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகை தர உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகை தர உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு பல முக்கிய தலைவர்கள் வர இருக்கிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகள் மிகவும் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ராகுல் காந்தி கலந்து கொள்வில்லை. இது இரண்டு கட்சியிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷா

அமித் ஷா

இந்த நிலையில்தான் சென்னையில் நடக்கும் கருணாநிதிக்கான நினைவேந்தலில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள இருக்கிறார். நேற்று இதற்கான அழைப்பிதழை திமுக சார்பில் டி.ஆர்.பாலு நேரடியாக சென்று அமித் ஷாவிடம் வழங்கினார். அமித் ஷா பெயர் பொறிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் வெளியாகி உள்ளது.

ராகுல் வருவாரா?

ராகுல் வருவாரா?

ஆனால் இதற்கு அப்படியே எதிராக, கருணாநிதியின் நினைவேந்தலுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வர மாட்டார். அமித் ஷா வருவதை விரும்பாத ராகுல் இப்படி செய்வதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகிறது. திமுகவிற்கு நெருக்கமான கட்சியான காங்கிரஸ் இந்த முடிவை எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. ராகுல் காந்திக்கு பதிலாக குலாம்நபி ஆசாத் கூட்டத்திற்கு வருகிறார்.

திமுக கட்சி மாற்றத்திற்கு பின்

திமுக கட்சி மாற்றத்திற்கு பின்

மேலும் இந்த நினைவேந்தல் கூட்டம் மிக முக்கியமான கட்டத்தில் நடக்க உள்ளது. திமுக பொதுகுழு கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் எப்படியும் தலைவர் ஆகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இதனால், ஸ்டாலின் தலைவரான பின் கட்சி சார்பாக நடக்க உள்ள பெரிய நிகழ்ச்சியில், இப்படி வித்தியாசமான நிகழ்வு நடக்க உள்ளது. இது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கூட்டணியா?

புதிய கூட்டணியா?

இந்த நிகழ்வு இன்னொரு விதமான கேள்வியையும் எழுப்பி உள்ளது. அதாவது திமுக காங்கிரசில் இருந்து விலகி , பாஜகவுடன் கூட்டணி சேர முயற்சி செய்கிறதா என்ற கேள்வி திமுக தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் திமுக, மாநில தலைவர்களுடன் நெருக்கமாக இல்லை, இதுவே பிளவிற்கு காரணம் என்றும் காரணம் சொல்லப்படுகிறது.

திமுக மறுப்பு

திமுக மறுப்பு

அதே சமயம் சில மூத்த திமுக நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தலுக்கு எல்லா தலைவரையும் அழைத்து போலவே, அமித் ஷாவையும் அழைத்தோம். இது அரசியல் மரியாதை மட்டுமே, கூட்டணி அச்சாரம் கிடையாது என்றுள்ளனர்.

அழகிரியை இயக்குகிறார்

அழகிரியை இயக்குகிறார்

அதே சமயம் இந்த நினைவேந்தலில் அழகிரி குறித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நினைவேந்தலுக்கு தமிழக அரசு சார்பில் யாராவது பங்கேற்பார்கள். அதேபோல் அமித் ஷாவும் பங்கேற்பார். இதனால் அங்கு சில நிர்வாகிகள், அழகிரி குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. திமுக கட்சி அடுத்தகட்ட நகர்விற்கு தயாராகிவிட்டது என்பது மட்டும் உறுதியாகிறது.

English summary
Karunanidhi Memorial Meet: Amit Shah In, Rahul out, New drift in DMK politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X