For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking: பாஜகவுக்கு எதிரான முழக்கமாக மாறிய கருணாநிதி நினைவேந்தல்!

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டம் தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டம் பாஜகவுக்கு எதிரான பிரகடனத்தை வெளியிடும் கூட்டமாக மாறிப் போனது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இககூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவருமே பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் அதுதான் கருணாநிதிக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்க முடியும் என்று வலியுறுத்திப் பேசினர்.

Newest First Oldest First
8:10 PM, 30 Aug

மா.சுப்பிரமணியன் நன்றியுரையுடன் நிறைவடைந்தது கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி
8:10 PM, 30 Aug

நீதித்துறை, பாராளுமன்ற ஜனநாயக குரல்கள் இப்போது நெரிக்கப்படுகின்றன- குலாம் நபி ஆசாத்

ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மரபுகளை மீறி மசோதாக்களை நிறைவேற்றுகிறது

எமெர்ஜென்சிக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததை போல இப்போது ஸ்டாலின் முன்வர வேண்டும்

8:10 PM, 30 Aug

தேசிய, மாநில விவகாரங்களில் கருணாநிதி ஆலோசனைகளை சோனியா பெற்றார்- குலாம் நபி ஆசாத்

சோனியா காந்திக்கு, கருணாநிதி ஒரு தந்தையை போன்றவர்- குலாம் நபி ஆசாத்

எமெர்ஜென்சியை மீண்டும் கொண்டுவர மாட்டேன் என கூறினார் இந்திரா காந்தி- குலாம் நபி ஆசாத்

எமெர்ஜென்சி மோசமானதாக இருந்திருக்கலாம், ஆனால் அதைவிட மோசமான நிகழ்வுகள் இப்போது நடக்கின்றன

கருணாநிதி மட்டும் உடல்நலத்தோடு இருந்திருந்தால் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்

அநீதி, கூட்டு படுகொலைகள், போராட்ட குரல்கள் ஒடுக்கப்படுவதை கருணாநிதி எதிர்த்திருப்பார்

8:01 PM, 30 Aug

33 வயதில், தமிழக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார்- குலாம் நபி ஆசாத்

ஒவ்வொரு தசாப்தங்களிலும் முதல்வராக பதவி வகித்தவர் கருணாநிதிதான்

8:01 PM, 30 Aug

21வது நூற்றாண்டு பிறந்தபோதும் அவர்தான் தமிழக முதல்வராக இருந்தார்

5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர் கருணாநிதி

பதவிகள் பெருகியபோதும் கருணாநிதி ஒரு அறை கொண்ட சிறு வீட்டில்தான் வசித்தார்- குலாம் நபி ஆசாத்

பாஜக, காங். இரு கட்சிகளுடனும் கருணாநிதி கூட்டணி வைந்தார், ஆனால் தனது கொள்கையை விடவில்லை

7:58 PM, 30 Aug

கருணாநிதி குடும்பத்தில் நானும் ஒருவன்- குலாம் நபி ஆசாத்

எனக்கு கருணாநிதி தந்தை ஸ்தானத்தில் இருந்தார்

மரணமடையும் வரை எழுதிக்கொண்டு இருந்தவர் கருணாநிதி

7:58 PM, 30 Aug

கூகுளில் யார் உலகின் மிகப்பெரிய கலைஞர் என தேடிபார்த்தேன்

தலைவர், எழுத்தாளர், கலைஞர் என பல துறைகளிலும் சிறந்தவர் கருணாநிதி மட்டுமே- குலாம் நபி ஆசாத்

உழவர் சந்தை, கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் உட்பட பல புரட்சிகர நடவடிக்கைகள் எடுத்தார்

சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை என தென் மாநிலங்களில் முதலில் கேட்டவர் கருணாநிதி

7:53 PM, 30 Aug

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து-குலாம் நபி ஆசாத்

நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் போராடியவர் கருணாநிதி

7:45 PM, 30 Aug

காஷ்மீர் மக்கள் தினந்தோறும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் - பரூக் அப்துல்லா

பிரிந்து போக விரும்புபவர்களை போக விட்டு விடுங்கள் - பரூக் அப்துல்லா

இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து இருக்கட்டும் - பரூக்

இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன் - பரூக் அப்துல்லா

தினந்தோறும் ஏதாவது நடக்குமா என்று அஞ்சி வாழ முடியாது - பரூக்

7:42 PM, 30 Aug

மாபெரும் சீரழிவுக்குப் பின்னர்தான் ஹிட்லர் சகாப்தம் முடிந்தது - பரூக் அப்துல்லா

ஆனால் இன்று அதுவரை காத்திருக்க முடியாது - பரூக் அப்துல்லா

இந்த மாபெரும் மனிதர் காட்டிய வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் - பரூக் அப்துல்லா

ஒருவரை ஒருவர் மதிக்கும், மொழியைக் கற்றுக் கொள்ளும் தன்மையை அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும் - பரூக் அப்துல்லா

7:39 PM, 30 Aug

நாட்டில் நடக்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்- பரூக் அப்துல்லா

ஸ்டாலினுக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது - பரூக் அப்துல்லா

7:38 PM, 30 Aug

நாட்டைக் காக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் - பரூக் அப்துல்லா

எங்குமே இன்று அதிகாரம் இல்லை, ஏழைகள் அதிகரித்து விட்டனர் - பரூக் அப்துல்லா

உலகிலேயே அதிக ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர் - பரூக்

நாடெங்கும் துயரங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன = பரூக் அப்துல்லா

ஆனால் பாஜகவினரோ அடுத்த ஆண்டே இந்தியா பொருளாதார வல்லரசாகப் போவதாக கூறுகின்றனர் - பரூக்

7:35 PM, 30 Aug

நாடு மாபெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளது - பரூக் அப்துல்லா

நமது முன்னோர்கள் கனவ கண்ட இந்தியாவாக இன்றைய இந்தியா இல்லை - பரூக் அப்துல்லா

ஜாதி, மதத்தால் நாடு பிளவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது - பரூக் அப்துல்லா

7:34 PM, 30 Aug

ஜனநாயகத்தின் தந்தை கருணாநிதி - பரூக் அப்துல்லா

அனைவரையும் சமமாக மதித்தவர் கருணாநிதி - பரூக் அப்துல்லா

கருணாநிதியின் பண்புகளை ஸ்டாலினும் பின்பற்றுவார் என நம்புகிறேன் - - பரூக் அப்துல்லா

7:19 PM, 30 Aug

நான் ரெடி நீங்க ரெடியா என்று கூறி டெரிக் ஓ பிரையன் தனது தமிழ்ப் பேச்சை முடித்தார்.
7:19 PM, 30 Aug

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதுதான் கருணாநிதிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும். இதற்கு திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் மேற்கு வங்கத்திலும் இதையே செய்வோம்.
7:19 PM, 30 Aug

இந்தியாவின் எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ளது. கர்நாடகத்தில் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.
7:19 PM, 30 Aug

அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும். இன்னும் 200 நாட்களில் இதை நாம் செய்ய வேண்டும்.
7:19 PM, 30 Aug

மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சிக்கு முன்னுரிமை கொடுத்தவர் கருணாநிதி.
7:18 PM, 30 Aug

மத்திய அரசின் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்தார் கருணாநிதி. அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க கோரினார்.
7:18 PM, 30 Aug

கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உலகுக்கு உரக்க சொன்னவர் கருணாநிதி. கருணாநிதி ஒரு பொதுதர்மவாதி. நவீன சிந்தனை கொண்ட மாமனிதர்.
7:18 PM, 30 Aug

திரினமூல் காங்கிரஸ், அதன் தலைவர் மமதா பானர்ஜி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலைஞரை நேசிக்கும் பல லட்சம் மேற்கு வங்க மக்களின் சார்பாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
7:18 PM, 30 Aug

கூட்டாட்சி தத்துவத்தை மதித்த மாபெரும் தலைவரை பற்றி பேசுவதற்கு புதிதாக பேச ஒன்றும் இல்லை. கூட்டாட்சி தத்துவத்தின் மன்னன் கருணாநிதி.
7:13 PM, 30 Aug

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் - டெரிக் ஓ பிரையன்

அதுதான் கருணாநிதிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும் - பிரையன்

நான் ரெடி நீங்க ரெடியா - பிரையன் பேச்சுக்கு திமுகவினர் உற்சாக கோஷம்

7:12 PM, 30 Aug

என் தமிழ் பேச்சில் வேறு ஏதாவது தவறு இருந்தால் நிச்சயம் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள்
7:11 PM, 30 Aug

அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும் - டெரிக் ஓ பிரையன் அழைப்பு
7:11 PM, 30 Aug

நான் இன்றைக்கு ஆங்கிலத்திலோ பெங்காலி மொழியிலேயோ இந்தி மொழியிலேோ பேசலாம்

ஆனால் இன்று தமிழ் மொழியில் பேச ஆசைப்படுகிறேன். - பிரையன்

7:09 PM, 30 Aug

டெரிக் ஓ பிரையன் தமிழில் பேச்சு
7:08 PM, 30 Aug

ஒவ்வொரு திமுக தொண்டரையும் வணங்குகிறேன் - டெரிக் ஓ பிரையன்

உங்களைப் போன்ற தொண்டர்களைக் கொண்டுதான் மமதா பானர்ஜி கட்சி தொடங்கினார் - பிரையன்

7:03 PM, 30 Aug

திரு தளபதி ஸ்டாலின் அவர்களே - திரினமூல் காங். எம்.பி. டெரிக் ஓ பிரையன்
READ MORE

English summary
Karunanidhi Memorial Meet: Leader groups together for the former DMK leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X