For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எளிமை விரும்பி கருணாநிதி.. தங்கத்தை தொட்டுகூட பார்க்காத தலைவர்!

கருணாநிதியிடம் ஏராளமாக பணம் இருந்தாலும் தங்கச்சங்கிலி அணிவதெல்லாம் அவருக்கு பிடிக்காதாம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    எப்போதுமே எளியமையே விரும்பி எளிமையாகவே வாழ்ந்த கருணாநிதி

    சென்னை: கருணாநிதியிடம் ஏராளமாக பணம், வசதி இருந்தாலும் எளிமையை விரும்பியவர். தங்கத்தை தீண்ட கூட மாட்டாராம்.

    கருணாநிதி என்ற அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவரின் நெடுங்கதைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆண்டுகள் நீண்டாலும் அவரது நினைவுகள் எப்போதுமே அப்படியேதான் இருக்கும்.

    இறுதிகாலம் வரை தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பாடுபட்ட இவர் குறித்த மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்.

    அணிந்ததில்லை

    அணிந்ததில்லை

    தி.மு.க. தேர்தல் செலவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்தைக் இதுவரை கருணாநிதி கழற்றியதே இல்லையாம். ஆனால், இதுவரை அவர் ஒரு முறை கூட , தங்க சங்கிலியை தனது உடலில் அணிந்ததில்லையாம். காரணம் இவருக்கு தங்கம் பிடிக்காது.

     மூளையே டைரி

    மூளையே டைரி

    தினமும் டைரி எழுதும் பழக்கம் கருணாநிதி கிடையாது. ஆனால், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி' என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.

     தலைவர் என்று அழைப்பர்

    தலைவர் என்று அழைப்பர்

    கருணாநிதியின் மனைவி, மகன்கள் மற்றும் பேரன் பேத்திகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே `தலைவர்'என்று தான் கருணாநிதியை அழைக்கின்றனர். கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருந்தது திருக்குறள் புத்தகம்.

     சங்கு மார்க் லுங்கி

    சங்கு மார்க் லுங்கி

    பெரும்பலான அரசியல் தலைவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் போது, பேண்ட் அல்லது வெள்ளை வேஷ்டியில் இருப்பார்கள். ஆனால், கருணாநிதி தனது வீட்டிற்கு சென்ற உடன் லுங்கிக்கு மாறிவிடுவார். அதுவும் சங்கு மார்க் வேட்டி தான் அவருக்கு பிடித்த லுங்கி. இது தான்யா திருப்தியா இருக்கு என்பாராம்.

    English summary
    Karunanidhi never like to wear gold ornaments except the ring, as it was presented by Arignar Anna.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X