For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோதுமைக்கு விலக்கு… அரிசிக்கு சேவை வரியா? மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi opposes service tax on rice
சென்னை: அரிசிக்கும் பருத்திக்கும் விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை மத்திய அரசு உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியிலே ஆட்சியை நடத்திக் கொண்டிருப்போருக்கு, விரைவில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வரப்போகிறது என்ற உணர்வே அற்றுப் போய் விட்டது போலும். அந்த அளவுக்கு பொதுமக்கள் விரும்பாத, ஏற்றுக் கொள்ள இயலாத அறிவிப்புகள் என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம் தொடர்ந்து சவால்விட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையிலே ஒன்றாகத் தான், தென்னக மக்களின் அடிப்படை உணவான அரிசிக்கு வரி விதித்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் சேவை வரியாம். சேவை என்றால் என்ன என்பதற்குப் புதிய அர்த்தத்தை மத்திய அரசு கண்டு பிடித்திருக்கிறது.

வேளாண்மை விளைபொருள் பட்டியலில் இருந்து அரிசியை நீக்கிய நிதித்துறைச் சட்டம், கோதுமையை மட்டும் அப்படி நீக்கிவிடாமல், வேளாண்மை விளைபொருள் என்று சொல்லி அதற்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஏன் இந்த வடக்கு - தெற்கு பாரபட்சம்?

கோதுமைக்கு விலக்கு

கோதுமைக்கு மட்டும் வரி விலக்கு, அரிசிக்கு கிடையாதா? அரிசியை முக்கிய உணவாக நுகர்ந்திடும் பகுதிகளில் இருந்து சென்று, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களா, இல்லையா? அரிசி உண்ணும் மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று டெல்லியிலே ஆட்சியில் இருப்போர் முடிவு செய்து விட்டார்களா?

அரிசி விலை உயரும்

இப்புதிய சட்டத்தால், வெளிமார்க்கெட்டில் அரிசி விலை உயரும் அபாயம் உள்ளது என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் போன்றவை தெரிவித்திருக் கின்றன. அரிசி மீதான இந்தத் தாக்குதலுக்கு தமிழக அரசின் பதில் நடவடிக்கை என்ன?

வடக்கு - தெற்கு பாரபட்சம்

வடமாநில மக்களுக்கு ஒரு நீதி, தென்னக மக்களுக்கு ஒரு நீதி என்று மத்திய அரசு பாகுபாடு காட்டக் கூடாது. இந்திய மக்கள் அனைவருக்கும் சமநீதி வழங்கும் வகையில் அரிசிக்கு மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பருத்திக்கும் சேவைவரி

பஞ்சாலைத் தொழில் ஏற்கெனவே நலிந்து கொண்டிருக் கின்ற நிலையில் அதன் காரணமாக நெசவாளர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். இந்தச் சூழலில் பருத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK president M.Karunanidhi Friday attacked the central government for levying service tax on rice while exempting wheat. He also criticised Tamil Nadu's ruling AIADMK for being silent on the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X