For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வேட்புமனுவில் சென்னை 'சபையர்' தியேட்டர் இடம் குறிப்பிடவில்லை... கருணாநிதி புகார்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வேட்புமனுவில் சென்னை சபையர் தியேட்டர் இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை விவரம்:

கேள்வி: ஜெயலலிதா இந்தப் பொதுத்தேர்தலையொட்டி தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவருடைய சொத்துக்கள் சில விடப்பட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: ஆமாம் வந்திருக்கிறது; குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் பழைய "சபையர்" திரையரங்கம் இருந்த காலி இடம் ஜெயலலிதா பெயரில் தான் உள்ளதாகவும், ஆனால் ஜெயலலிதாவின் வேட்பு மனுவில் அந்த இடம் குறிப்பிடப்படவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.

வரிகட்டும் ஜெ.

வரிகட்டும் ஜெ.

ஒருவேளை அந்த இடம் கட்சிப் பெயரில் வாங்கப்பட்டிருந்தால், சொத்து வரி கட்சியின் பெயரில் கட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்திற்கான சொத்து வரியை ஜெயலலிதா தான் கட்டி வருகிறார். இதைப் போல வேறு சில சொத்துக்களும் ஜெயலலிதாவின் வேட்பு மனுவிலே சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால் எத்தனை பெரிய முறைகேடுகளையும் மூடி மறைத்திடக் கூடிய சாதுர்யமும், சக்தியும் ஜெயலலிதாவுக்கு உண்டு என்பது தான் எல்லோருக்கும் தெரியுமே!

நிலக்கரி ஊழல்

நிலக்கரி ஊழல்

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களைப் பற்றி தமிழகமே விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், அ.தி.மு.க. வினர் "நேர்மையின் அவதாரங்கள்" என்பதைப் போல முதலமைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில அமைச்சர்களும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்! இதோ ஓர் உதாரணம். அ.தி.மு.க. ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் மட்டும், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், இந்தப் பணம் இந்தோனேசியா வங்கிகளில் குவித்துச் சேமிக்கப்படுகிறது என்றும் ஒரு தகவலை மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

இருமடங்கு விலைக்கு...

இருமடங்கு விலைக்கு...

தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 200 இலட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதில் 140 இலட்சம் டன் நிலக்கரி உள்நாட்டு நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனங்கள் மூலம் பெறப்படுகிறது. மீதி சுமார் 60 இலட்சம் டன் நிலக்கரி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. அயல்நாடுகளில் நிலக்கரி விலை 2009ஆம் ஆண்டுகளில் டன் ஒன்று 130 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டில் இருந்து நிலக்கரி விலை வீழ்ச்சி கண்டு, 30 டாலர் முதல் 40 டாலராக உள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் கப்பல் சரக்கு கட்டணம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால், ஒரு டன் நிலக்கரியின் இறக்குமதி விலை 50 டாலர்கள் தான். (அதாவது இந்திய நாணய மதிப்பில் 3 ஆயிரத்து 360 ரூபாய்) ஆனால் தமிழக மின்வாரியம், போலியான ஆவணங்கள் மூலம் இந்த நிலக்கரியை 87 டாலருக்கு வாங்குவதாகக் கணக்கு காட்டுகிறது.

ஆண்டுக்கு 1,500 கோடி கொள்ளை

ஆண்டுக்கு 1,500 கோடி கொள்ளை

அதாவது டன் ஒன்று 3 ஆயிரத்து 360 ரூபாய் விலைக்கு வாங்கப்படும் நிலக்கரியை, 5 ஆயிரத்து 752 ரூபாய்க்கு வாங்குவதாக மோசடியான பொய்க் கணக்குக் காட்டப்படுகிறதாம். இந்தத் தகவல் "எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி" என்ற பிரபல ஆங்கில ஏட்டின் 9-4-2016 அன்று வெளியான பதிப்பில் இடம் பெற்றுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கப்பலில் வரும் போது, "இன்வாய்ஸ்" எல்லாம் திருத்தி மாற்றப்பட்டு, புது ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 87 டாலராக அதாவது 5 ஆயிரத்து 752 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுப் பொய்க் கணக்கு பதிவு செய்யப்படுகிறது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மூலம் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்டு கூடுதலாக வரும் தொகை அ.தி.மு.க. அமைச்சர்களுக்காக இந்தோனேஷியா வங்கிகளில் சேமிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் நிறுவனமான வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளதாக "எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி" கூறியுள்ளது.
(Due to over-invoicing, an ordinary consumer of electricity may be ending up paying around Rs. 1.50 per unit or kilowatt hour (kwh) extra. So if a household consumes, say, 1,000 units and pays, say, Rs. 3 per unit, the household would be paying an extra Rs. 1,500 per month on the electricity bill or twice the amount that should have been actually charged had imported coal not been over-invoiced)

ஜெ.வின் பதில் என்ன?

ஜெ.வின் பதில் என்ன?

தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் 60 லட்சம் டன் நிலக்கரியில் கணிசமான அளவு அதானி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. "எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி" வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவலை, தமிழக மின்வாரியமோ, மின்துறை அமைச்சரோ, முதல் அமைச்சரோ இதுவரை மறுக்கவில்லை. இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மனோஜ்குமார் கார்க் என்ற நபர் மும்பை நீதி மன்றத்தில் இந்த விபரங்களை வாக்குமூலமாகவே கொடுத்திருப்பதாகவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது. பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன?

அதிகாரிகள் தொடர் மாற்றம்

அதிகாரிகள் தொடர் மாற்றம்

கேள்வி: இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கான தொகை கடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பற்றி விரிவாக எழுதியிருந்தீர்களே?

பதில்: உண்மைதான்! இந்தத் தேர்தலையொட்டி பணம் கடத்தப்படுவது மட்டுமல்ல; அதிகாரிகள் மாறுதல்களிலும் இதுவரை எந்தத் தேர்தலிலும் நடைபெறாத அளவுக்கு நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி. அசோக் குமார் அவர்களே தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டி.ஜி.பி., மகேந்திரன், தேர்தல் பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஏ.டி.ஜி.பி., கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டர்கள், எஸ்பிக்களும் மாற்றம்

கலெக்டர்கள், எஸ்பிக்களும் மாற்றம்

மேலும் ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, புதுக் கோட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 7 மாவட்ட எஸ்.பி.க்கள், மற்றும் கரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம், வேலூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி உட்பட 9 மாவட்டக் கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். எனினும், தமிழக போலீஸ் தான் ஆளும் கட்சிக்கு ஆதரவாக முழுமையாக செயல்பட்டு வருவதாக எதிர்க் கட்சிகள் சார்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. அதில் குறிப்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் பற்றியும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., திரிபாதி பற்றியும் தொடர்ந்து, அவர்கள் ஆளுங்கட்சிக்கு எவ்வாறு துணையாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் செய்திகள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான் நேற்று (1-5-2016) சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் மாற்றப்பட்டு, மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.ஜி.பி., அசுதோஷ் சுக்லா சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அது போலவே சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி மாற்றப் பட்டு அந்தப் பதவியில் கடலோரக் காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து ஆளும் அ.தி.மு.க. எவ்வாறெல்லாம் சட்டத் திற்குப் புறம்பாக அதிகாரிகளைப் பயன்படுத்திப் பலிகடாவாக ஆக்குகிறார்கள் என்பது புரிகிறதல்லவா?

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has questioned CM Jayalalithaa's nomination paper asset details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X