For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 முறை தமிழக முதல்வராக பணியாற்றிய கருணாநிதியின் மகத்தான சாதனைகள்!

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகத்தான சாதனைகள்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாடு கண்டிராத கலைஞரின் தலை சிறந்த சாதனைகளின் பட்டியல்

    சென்னை: 95-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்த கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற மகத்தான சாதனைகள் நிறைவேற்றப்பட்டன.

    தந்தை பெரியாரின் லட்சியமான பெண்களுக்கும் சொத்துரிமையில் பங்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் உள்ளிட்ட ஏராளமானவற்றை நிறைவேற்றியவர் கருணாநிதி. குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம், கல்வி கட்டணங்கள் ரத்து, புதிய கல்லூரிகள் அமைத்தல் என தம்முடைய ஆட்சிக் காலத்தில் கருணாநிதி எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

    இலவச கண்ணொளி திட்டம்

    கைரிக்ஷாக்களை ஒழித்தது, கண்ணொளித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது கருணாநிதி ஆட்சியின் தொடக்க கால சாதனைகள்.

    விவசாய கடன் ரத்து

    தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார் கருணாநிதி. ரூ7,000 கோடி விவசாய கடன்களை ரத்து செய்தவரும் கருணாநிதிதான்.

    தமிழ் செம்மொழி அறிவிப்பு

    தமது ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கினார் கருணாநிதி. மேலும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

    இலவச தொலைக்காட்சி பெட்டிகள்

    மகளிர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய சுய உதவிக் குழுக்கள் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டன. ஏழைகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டதும் மகத்தான திட்டம்.

    புதிய சட்டசபை வளாகம்

    சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கான புதிய சட்டசபை வளாகத்தை கட்டியவர் கருணாநிதி.

    எம்பிசிக்கு 20% இடஒதுக்கீடு

    இஸ்லாமியர்க்கு தனி இடஒதுக்கீடு; அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு என சமூக நீதியை சாதித்தவர் கருணாநிதி. அதேபோல் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கியவரும் கருணாநிதி.

    English summary
    Here are the List of Former TamilNadu Chief Minister DMK President Karunanidhi's amazing Achievemnets.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X