For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமணரல்லாத அர்ச்சகர்.. கருணாநிதியின் 50 வருட கனவு.. மருத்துவமனையில் இருக்கும் போது நிறைவேறியது!

பிராமண ஜாதியை சேராத மக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று திமுக தலைவர் கருணாநிதியின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: பிராமண ஜாதியை சேராத மக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று திமுக தலைவர் கருணாநிதியின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளில் ஒன்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது. இதற்காக 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார். 2006ல் முதல்வராக இருந்த சமயத்தில், அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.

Karunanidhis dream comes true, First non-brahmin became a priest

ஆனால் அதை எதிர்த்து பிராமண சமூகத்தினர், பலர் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, இதைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு 2007ல் சைவ மற்றும் வைணவ முறைப்படி தமிழகம் முழுக்க அர்ச்சகர் பயிற்சி மையங்களை அமைத்தது. இதில் 2008ல் 206 பேர் பயிற்சி பெற்றார்கள்.

ஆனால் இவர்களுக்கு இவ்வளவு வருடம் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது. கடைசியாக கடுமையான அகமவிதிகளின் படி அவர்கள் பணியில் சேர அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் தற்போது பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகர் ஆகி உள்ளார்.

மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இன்னும் 205 பேருக்கு பணியானை எப்போது வேண்டுமானாலும் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. பல வருட போராட்டங்களுக்கு பின்பு திமுகவின் இந்த கனவு திட்டம் கருணாநிதி மருத்துவமனையில் இருக்கும் போது நடைமுறைக்கு வந்துள்ளது.

English summary
DMK leader Karunanidhi's dream comes true, First non-brahmin became a priest in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X