For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக.. அனல் பறந்த கருணாநிதியின் வசனங்கள்

திரை உலகில் அனல் பறந்த கருணாநிதியின் வசனங்கள்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கலைஞரின் கவிப்படைப்புகளில் சிறந்த ஒன்று

    சென்னை: 95-வது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடி வரும் திமுக தலைவர் கருணாநிதியின் அனல் பறக்கும் சினிமா வசனங்கள் காலத்தால் அழியாதது.

    தமிழ் சினிமாவில் எழுத்து மொழியே உரையாடலாக இருந்தது.. பாமர மக்களின், எளியவர்களின் வாழ்க்கை பேசாப் பொருளாக இருந்தது.

    ஆனால் கருணாநிதி எனும் இளைஞர் திரை உலகில் அடி எடுத்து வைத்த காலம் முதல் அத்தனையும் தலைகீழாய் போனது... 'அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்" என தொடங்கி அப்பப்பா எத்தனை எத்தனை அனல் கக்கும் தீப்பறக்கும் வசனங்கள்.

     எம்ஜிஆர் வசனம்

    எம்ஜிஆர் வசனம்

    மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் எம்ஜிஆர் வாயிலாக கருணாநிதி பேசும் வசனம் இன்றைக்கும் சாலப் பொருந்துகிறது. இன்றைய அரசியல் சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது.

     நெருப்பு வசனங்கள்

    நெருப்பு வசனங்கள்

    திரை உலகின் கருணாநிதியை கொண்டாட வைத்த திரைப்படம் பராசக்தி. சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர். எனும் இளைஞர்கள் மூலமாக பேசிய வசனங்கள் காப்பியத்தின் பக்கங்கள்.

     பராசக்தியை மிஞ்சிய மனோகரா

    பராசக்தியை மிஞ்சிய மனோகரா

    மனோகரா.. எத்தனை அழுத்தமான வசனங்கள்.. எவ்வளவு அழகான மொழி நடை.. தமிழின் அழகை, வீரத்தை, காதல் ரசத்தை அத்தனையையும் களமிறக்கி விளையாடியிருப்பார் கருணாநிதி.

     சரித்திர காவியம்

    சரித்திர காவியம்

    கருணாநிதி படைத்த திரைப்பட படைப்புகளில் பூம்புகார் மறக்க முடியாத ஒன்று. அந்த சிலப்பதிகார காவியத்தை நம் முன்னே திரை கதாபாத்திரங்களாக நடமாட விட்டிருப்பார்.

     ராஜா ராணி

    ராஜா ராணி

    ராஜா ராஇ திரைப்படத்தில் சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகம் இடம்பெற்றிருந்தது. அதில் சிவாஜி மூலமாக கருணாநிதி பேசிய வசனங்கள் திராவிட பேரியக்கத்தின் மகோன்னதத்தை பறைசாற்றியது என்பது மிகையல்ல.

    English summary
    Here the DMK President Karunanidhi's famous cinema Dialogues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X