For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் கருணாநிதியின் இருக்கை தற்போது யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா?

சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய இருக்கை அக்கட்சி எம்எல்ஏ எவ வேலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய இருக்கை அக்கட்சி எம்எல்ஏ எவ வேலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்து வரும் மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர்.

1957 சுயேச்சை

1957 சுயேச்சை

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார்

வரலாற்றை துவக்கினார்

வரலாற்றை துவக்கினார்

1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்காமல் உள்ளார்.

எவ வேலுக்கு ஒதுக்கீடு

எவ வேலுக்கு ஒதுக்கீடு

இந்நிலையில் சட்டசபையில் கருணாநிதியின் இருக்கை அக்கட்சியின் எம்எல்ஏவான எவ.வேலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் இருக்கை 207 ஏ என மாற்றி எவ வேலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English summary
DMK president and former Chief Minister Karunanidhi seat in assembly is allocted to DMK MLA AV Velu. Karunanidhi is not participating in assembly activities due to illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X