For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் கோயில் வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்புக்கு ஜெயலலிதாவே காரணம்: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi slams Jayalaitha in chithambaram natarajar temple
சென்னை: "சிதம்பரம் கோயில் வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கு அ.தி.மு.க அரசே காரணம்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதாகவும் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னை நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு, கடைசியாக தி.மு.க., ஆட்சியில் தான் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட, 34 பேரை, காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் கோரிக்கையும், "தமிழக அரசு, சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து, இது தொடர்பான வழக்கை விரைந்து நடத்த வேண்டும்' என்பது தான்.

தமிழக அரசு வீண் காலதாமதம் செய்யாமல், மூத்த வழக்கறிஞர்களை, உச்ச நீதிமன்றத்தில் வாதாட, ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் நேற்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில், முறைகேடுகள் நடந்தது என்ற காரணத்திற்காக கோயிலை அரசு நிர்வகிக்க வேண்டியதில்லை. முறைகேடு நடந்திருந்தால் விசாரிக்கலாம். ஆனால் கையகப்படுத்த அதிகாரம் இல்லை. செயல் அதிகாரி நிரந்தரமாக செயல்பட முடியாது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவும், சிறப்பு அதிகாரி நியமன உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.

எனவேதான் கருணாநிதி தனது அறிக்கையில், தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதனால்தான் ஆலய நிர்வாகம் மீண்டும் தீட்ஷிதர்கள் வசம் சென்று விட்டது என்று தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi said that Tamil Nadu government would show more responsibility in the Chithambaram temple issue. He also said while the ruling was brought about MGR’s rule in TN and the priests have already secured a stay order on the ruling, the government should not facilitate the priests to win the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X