For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.க்குதான் மதுபான ஆலை இருக்கிறது... திமுகவினர் யாருக்குமே இல்லை... கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: முதல்வர் ஜெயலலிதாவுக்குதான் மதுபான ஆலை இருக்கிறது; ஆனால் திமுகவினர் யாருக்குமே மதுபான ஆலை இல்லை என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

திமுகவையும், எதிர்க் கட்சிகளையும் அடக்குவதிலேயே ஜெயலலிதா ஆர்வமாக உள்ளார். கம்யூனிஸ்ட்கள் எந்தத் தத்துவத்தை சொல்கிறார்களோ அந்தத் தத்துவத்தை செயல்படுத்திக் காட்டும் இயக்கம் திமுக.

பணம் வாரி இறைப்பு

பணம் வாரி இறைப்பு

இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, தண்ணீரை விடவும் மலிவாக பணம் வாரி இறைக்கப்படுகிறது. தாங்களே வெற்றி பெற வேண்டும், தாங்களே ஆட்சியை பிடிக்க வேண்டும், தாங்களே கொள்ளையடிக்க வேண்டும் என்ற வகையில் ஒரு கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கிறது. நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கிக் கொண்டுள்ளது.

சபதமேற்போம்..

சபதமேற்போம்..

தமிழர்களைக் காப்பாற்ற நம்மை விட்டால் வேறு கதியில்லை. நாம்தான் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதனால், தியாகத்துக்கு தயாராகுங்கள். எதற்கும் தயார் என்ற சபதத்தை எடுத்துப் பணியாற்றுங்கள். எதிரிகள் வெற்றி பெற்றுவிட்டால், பின்னர் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்ச் சமூகத்தை மீட்க முடியாது.

மதுக்கடைகளை மூடியது நானே...

மதுக்கடைகளை மூடியது நானே...

ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்கிறார். அது, என்ன படிப்படியாக என்று புரியவில்லை. மதுக்கடைகளை திறந்தது கருணாநிதிதானே என்று குற்றம் சாட்டும் ஜெயலலிதாக்கள் உள்ளனர். 1971-ல் மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டு தமிழ்நாட்டு கஜானாவுக்கு வருமானம் செலுத் தப்பட்டது. மீண்டும் 2 ஆண்டு களிலேயே மதுக்கடைகளை மூடிய பெருமை எனக்கு உண்டு.

ஜெ..க்கு மதுபான ஆலை

ஜெ..க்கு மதுபான ஆலை

ஆனால், அப்படி மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறந்து, அரசாங்கமே வியாபாரம் செய்த பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. இன்றைக்கும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மது ஆலை உண்டு. அதில், விலை உயர்ந்த மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், திமுகவினர் யாருக்கும் மது ஆலைகள் கிடையாது. மது வியாபாரம் செய்ததும் கிடையாது.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

English summary
DMK leader Karunanidhi had slammed CM Jayalalithaa on Prohibition issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X