For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது திட்டத்தில் அண்ணாவின் கனவை ஜெயலலிதா அரசு புறக்கணிக்கிறது: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சேதுசமுத்திரத் திட்டத்திற்காக 1967ஆம் ஆண்டு அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தாரையும், தமிழ்நாட்டு மக்களையும் பார்த்து விடுத்த வேண்டுகோள், சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

அண்ணாவின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற, அந்தக் கனவை நனவாக்க, முயற்சிகள் எடுத்துக் கொண்டு, திராவிட இயக்கத்தாராகிய நாங்கள் பாடுபடும்போது, இன்றைக்கு இருக்கின்ற அரசு, ஏற்கனவே ஒருமுறை இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரியிருக்கிறது.

திரும்பவும் இப்போது நான் கேள்விப்படுகிறேன். இரண்டாவது முறையாகவும், ஏற்கனவே தாங்கள் சொல்லவிட்டுப்போன விஷயங்களைச் சொல்லுகிறோம் என்று சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு முறையீடு செய்திருக்கிறது.

அண்ணா அவர்களின் எண்ணங்களை, தமிழ்நாட்டு மக்களுடைய தேவைகளை இந்த ஆட்சி எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படுகிறது என்பதற்கு இதுவே தக்க அடையாளம்" என்றார்.

English summary
DMK chief and former chief minister M Karunanidhi on Tuesday accused the Jayalalithaa-led Tamil Nadu government of adopting "double-standards" by opposing the Sethusamudram project in Supreme Court and said it was a "betrayal" of the state. "The AIADMK Government had made a written submission in the Supreme Court saying the project was not at all needed," Karunanidhi, a staunch supporter of the multi-million rupees controversial project, said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X