For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சாவூரில் கூட ஜெயிக்க முடியலையே.... ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் கருணாநிதி

இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனதால் ஸ்டாலின் மீது கருணாநிதி அதிருப்தியில் இருக்கிறாராம்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தஞ்சாவூர் தொகுதியில் கூட திமுகவால் வெல்ல முடியாமல் போனது அக்கட்சித் தலைவர் கருணாநிதியை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். இதனால் திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது கருணாநிதி கடும் அதிருப்தியில் உள்ளாராம்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பாக கருணாநிதிக்கு அடுத்தடுத்து ஏகப்பட்ட புகார்கள் சென்றன. எதிர்தரப்பை அரவணைத்து செல்லாமல் அவர்களை கண்டுகொள்ளாமலேயே தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதை ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டிய கருணாநிதி, அனைவரையும் அரவணைத்து தேர்தல் பணியாற்றுமாறு அறிவுறுத்தல் விடுத்தார். ஸ்டாலினும் சரிசரி என தலையாட்டிவிட்டு போனதுதான்... அவரோ தம்முடைய ஆதரவாளர்களை வைத்து மட்டுமே தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

ஸ்டாலின் மீது சரமாரி புகார்

ஸ்டாலின் மீது சரமாரி புகார்

ஸ்டாலினின் இந்த போக்கு குறித்து திமுக மூத்த தலைவர்கள் மட்டுமின்றி அழகிரி, கனிமொழியும் கூட கருணாநிதியிடம் வருத்தப்பட்டார்களாம். தம்மை தேர்தல் பிரசாரத்துக்கே போகக் கூடாது என ஸ்டாலின் கட்டுப்படுத்தியதையும் கனிமொழி கருணாநிதியிடம் கூறி புலம்பியிருக்கிறார்.

அசால்ட்டு ஸ்டாலின்

அசால்ட்டு ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து ஸ்டாலினை மீண்டும் கருணாநிதி அழைத்துப் பேச, உங்களுக்கு வந்த புகார் எல்லாமே பொய்... அரவக்குறிச்சியும் தஞ்சாவூரும் நமக்குதான்... அதைப்பற்றியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க என ரொம்பவே அசால்ட்டு காட்டியிருக்கிறார் ஸ்டாலின். இதனால் தேர்தல் முடிவுகள் வரும் வரை அமைதிகாத்தார் கருணாநிதி.

நொந்து போன கருணாநிதி

நொந்து போன கருணாநிதி

தேர்தல் முடிவுகள் வர வர ரொம்பவே நொந்துவிட்டாராம் கருணாநிதி.. அட தஞ்சாவூரில் எளிதாக ஜெயிக்கலாம்னு எல்லோரும் சொல்லியும் ஒழுங்கா அரவணைச்சு போகாததுதான் இந்த நிலைமைக்கு காரணம் என குமுறியிருக்கிறார்... அப்போது ஸ்டாலின் தரப்பில், தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டும் என கருணாநிதியிடம் கேட்கப்பட்டிருக்கிறது.. அதெல்லாம் என்னால் தர முடியாது என கோபமாக சொல்லிவிட்டாராம் கருணாநிதி.

அறிக்கையின் பின்னணி

அறிக்கையின் பின்னணி

பின்னர் அனைவரும் சமாதானப்படுத்தியதால் 'பணநாயகம் வென்றது" என்ற அறிக்கையை போனால் போகிறது என வெளியிட்டாராம் கருணாநிதி,

English summary
Sources said that DMK leader Karunanidhi very upset over MK Stalin for the election defeats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X