For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடர கருணாநிதி கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நடப்பாண்டில் மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ப்ளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளி வருவதற்கு முன்பு, இன்று மாணவ, மாணவியர்கள் இந்த ஆண்டு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றன. இதில் 1195 மதிப்பெண்கள் பெற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவியும், அதே பள்ளியைச் சேர்ந்த ஜஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். 1,194 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மாணவிகள் தேர்ச்சி

மாணவிகள் தேர்ச்சி

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழியில் தேர்வு

தமிழ் வழியில் தேர்வு

ப்ளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர்.

நுழைவுத் தேர்வு சந்தேகம்

நுழைவுத் தேர்வு சந்தேகம்

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள இந்த நேரத்தில், மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் தொடர்ந்து பயிலுவதற்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டா என்பது இன்னமும் முடிவாகாத நிலையில் மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோர்களும் கவலையிலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இந்தத் தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்று தி.மு. கழக ஆட்சியில் சட்டமியற்றி உருவாக்கப்பட்ட நிலைக்கு மாறாக வேறு ஒரு புதிய நிலை ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பு

நுழைவுத் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பு

தொழிற்கல்லூரிகளை நடத்தும் தனியார் சிலர் உச்ச நீதிமன்றத்தில் நுழைவுத் தேர்வு குறித்து தொடுத்துள்ள வழக்கு இன்னமும் இறுதித் தீர்ப்பினை எட்டாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கையினை விரைவாக எடுத்து, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடருவதற்கு வழி வகைகளைக் காண வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

English summary
DMK leader has urged the Centre to drop the Medical Entrance Exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X