For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்டை ஜெயலலிதா பாராட்ட சொத்துக் குவிப்பு வழக்கே காரணம்: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட் பற்றி பலபட புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். அது ரயில்வே பட்ஜெட்டுக்காக என்பதை விட, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் வரவிருப்பதையொட்டிய பாராட்டாக இருக்கலாம் என்று யாரும் எண்ணிடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

மத்திய ரயில்வே பட்ஜெட்டை நேற்று ரயில்வே அமைச்சர் சதானந்தா கெளடா தாக்கல் செய்தார். அதில் தமிழகத்திற்கு பெரிய அளவில் எதுவுமே இல்லை.

இந்த பட்ஜெட் குறித்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:

கெளடா பட்ஜெட்

கெளடா பட்ஜெட்

பா.ஜ.க. அரசின் இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடாவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்டணத்தை ஏற்றி விட்டு பட்ஜெட்

கட்டணத்தை ஏற்றி விட்டு பட்ஜெட்

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; ‘‘கடந்த கால அரசின் முடிவு அது'' என்று கூறி அறிவித்துவிட்டு, பட்ஜெட்டில் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

அதி வேக ரயில்களுக்கு வரவேற்பு

அதி வேக ரயில்களுக்கு வரவேற்பு

இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் என்றும், அது தவிர ஹைதராபாத்துக்கும், பெங்களூருக்கும் சென்னையில் இருந்து அதிவேக ரயில்கள் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

கடந்த ஆண்டு 9 ரயில்கள் கிடைத்தது

கடந்த ஆண்டு 9 ரயில்கள் கிடைத்தது

கடந்த ஆண்டு படிக்கப்பட்ட மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு முதலீடு நல்லதல்ல

வெளிநாட்டு முதலீடு நல்லதல்ல

துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியிருப்பதும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க விரும்புவதாக கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கது அல்ல.

போலீஸ் தேர்வுக்கு வரவேற்பு

போலீஸ் தேர்வுக்கு வரவேற்பு

ரயில்வே பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதும், அதில் 4 ஆயிரம் பேர் பெண் போலீஸ் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதும் வரவேற்கக் கூடியதாகும்.

ஜெ. பாராட்டுவது ஏன்...

ஜெ. பாராட்டுவது ஏன்...

முதல்வர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட் பற்றி பலபட புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். அது ரயில்வே பட்ஜெட்டுக்காக என்பதை விட, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் வரவிருப்பதையொட்டிய பாராட்டாக இருக்கலாம் என்று யாரும் எண்ணிடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi has welcomed some aspects in the Railway budget submitted in the Parliament yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X