For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கருணாஸ் தலைமறைவு? பிடிக்க தனிப்படைகள் அமைப்பு!

காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமறைவு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கருணாஸ்- வீடியோ

    சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், முதல்வரே நான் அடிப்பேன் என பயப்படுகிறார் என்றார்.

    மேலும் தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை சரமாரியாக விளாசிய கருணாஸ், காக்கிச்சட்டையை கழட்டி வைத்துவிட்டுவா மோதி பார்க்கலாம் என்று சவால் விடுத்தார்.

    பல்துலக்கும் நேரத்தில்

    பல்துலக்கும் நேரத்தில்

    மேலும் உங்களுக்கு போதை ஏத்தினால்தான் கொலை செய்ய தைரியம் வரும் ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே கொலை செய்வோம் என்றார். பல்துலக்கும் நேரத்தில் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்தார்.

    வழக்குப்பதிவு

    வழக்குப்பதிவு

    கருணாஸின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மூன்று தனிப்படைகள்

    மூன்று தனிப்படைகள்

    இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    வீட்டில்தான் உள்ளேன்

    வீட்டில்தான் உள்ளேன்

    இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளியளித்த கருணாஸ் நான் வீட்டில்தான் உள்ளேன் என தெரிவித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில்தான் இருக்கிறேன் என்றும் தலைமறைவு என வெளியாகும் என தகவல் தவறானது என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Police says Karunas absconded and set up three teams to arrest him. But Karunas refuses this and said I am in my house only.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X