For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாஸை கைது செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை- தமிழக அரசு

Google Oneindia Tamil News

மதுரை: நெல்லையில் காரை சேதப்படுத்திய வழக்கில் கருணாஸை கைது செய்யும் திட்டம் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நெல்லையில் புலித்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட கருணாஸ் நெல்லையில் தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Karunas applies for anticipatory bail

இதுதொடர்பாக அவர் நெல்லை போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீஸார் நேற்றிரவு சென்னை வந்தனர்.

[இதுதான் திமுகவின் மாஸ்டர் பிளானா? கருணாஸ் அதிரடியின் பின்னணி ]

பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் இல்லாததால் போலீஸார் திரும்பி சென்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதைாக்கல் செய்யப்பட்டது.

அப்போது கருணாஸை கைது செய்யவே நெல்லை போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறி முன்ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்து இதை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினார். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகி கருணாஸை கைது செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை என்றார். இதையடுத்து நெல்லையில் காரை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கு ஏற்கனவே பட்டியலிட்டப்படி நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

{document1}

English summary
MLA Karunas applies for anticipatory bail in Chennai HC's Madurai branch. The court will hear it on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X