For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமெடியன் கருணாஸ் திடீர் புயலாக மாறியது ஏன்?

மாநில முதல்வரை கருணாஸ் மிரட்டுவது ஆச்சரியமாக உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாஸ் பரபரப்பு பேச்சு

    சென்னை: தமிழ்நாட்டு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று கொஞ்சம்கூட நினைத்தே பார்த்திருக்க மாட்டோம்.

    சில மாதங்களுக்கு முன்பு ஒரு காமெடி நடிகர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதோ இன்னொரு காமெடி நடிகர் முதல்வரையே கடுமையாக விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

    ஒரு சாதாரண நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு திரையில் நுழைந்தவர் கருணாஸ். ஆரம்பத்தில் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் தற்போது அவரது முகமே வேறாக மாறி விட்டது.

     மெளனம்

    மெளனம்

    முதல்வரையும், போலீஸ் அதிகாரியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் முதல்வரை விமர்சித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவைப் பார்த்து யாருமே இதுபோல கடுமையாக பேசியதாக வரலாறு இல்லை. அதை விட முக்கியமாக, எந்தக் கட்சியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ, அந்த கட்சியின் முதல்வரைப் பார்த்து கடுமையாக பேசியிருப்பதுதான் ஆச்சரியம்.

     நிர்ப்பந்தம்

    நிர்ப்பந்தம்

    ஒரு சாதாரண எம்எல்ஏ, அதுவும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவரை ஒரு முதலமைச்சரால் கண்டிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் தமிழக மக்களுக்கான முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கருணாஸ் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    சசிகலா

    சசிகலா

    ஆரம்பத்திலிருந்தே சசிகலா ஆதரவாளர் கருணாஸ். சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு கொடுத்தார். ஆனாலும் தனி அணியாக இவரும், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் மூவர் அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் உள்ளுக்குள் இவர் சசிகலா ஆதரவாகவே வலம் வருகிறார்.

     தயக்கத்திற்குக் காரணம்

    தயக்கத்திற்குக் காரணம்

    கருணாஸ் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததற்கு இதுவே காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் ஏற்கனவே ஸ்லீப்பர் செல்லாக உள்ளதாக பேச்சு உள்ளது. எனவேதான் கருணாஸ் மீதான தயக்கத்திற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

     பதிலடி தரவில்லை

    பதிலடி தரவில்லை

    அதேசமயம், கருணாஸ் பேச்சுக்கு அதிமுக தலைமை ஒரு கண்டிப்பு அறிக்கையாவது கொடுத்திருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. காரணம் முதல்வர் பதவிக்கென்று உள்ள மரியாதையை கருணாஸ் அவமதித்து விட்டதாக மக்கள் கருதுகிறார்கள்.

    English summary
    Actor Karunass's speech on CM Edappadi Palanisamy has created a furore in Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X