For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூர் புறா பந்தையம்... சிறகடித்து பறந்த புறாக்கள் - வீடியோ

கரூரில் பாரம்பரியம் மிக்க புறா பந்தையம் தொடங்கியுள்ளது ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கரூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான இரா.வைரப்பெருமாள் அவர்களின் நினைவாக நேற்று 48-ம் ஆண்டு நினைவு புறா போட்டி தொடங்கியது.

சாதா புறா மற்றும் கர்ணப் புறா போட்டி என்று இரு வித போட்டிகள் நடைபெறும். அவரது மகனும், கரூர் நகர அதிமுக செயலாளருமான வை.நெடுஞ்செழியன் ஆண்டு தோறும் புறா போட்டி நடத்தி வருகின்றார்.

Karur Dove Race

இந்த போட்டியில் முதல்கட்டமாக சாதா புறா போட்டி இன்று காலை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது.
இந்த புறாப்போட்டியை ஈரோடு மாவட்ட புறா போட்டி சங்க தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

6 மணி நேரம் தொடர்ந்து பறக்க வேண்டும் என்கின்ற விதியில் கீழ், எந்த புறா அதிகமாக பறக்கின்றதோ? அந்த புறாக்கள் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

சாதா புறா போட்டியானது வரும் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுமென்றும், இதையடுத்து கர்ணப்புறா போட்டியானது ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை மூன்று தினங்கள் வரை நடைபெற உள்ளது என்று புறா போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Every year in karur,in the memory of Ex Municipality Counsellor Vairaperumal Dove flying comepetition is being held.Yesterday is 48th year of Dove race begin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X