For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒழுங்காக நீதிமன்றத்துக்கு வரவேண்டும்... டிமிக்கி கொடுத்த எஸ்வி சேகருக்கு கரூர் நீதிபதி வார்னிங்

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் எஸ். வி.சேகருக்கு கரூர் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ்வி சேகருக்கு கரூர் நீதிபதி வார்னிங்- வீடியோ

    கரூர்: பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்கு தொடர்பாக எஸ் வி சேகர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி கடுங்கோபம் கொண்டார்.

    சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அப்போது ஒரு பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினார்.

    இதனால் அந்த பெண் கோபமடைந்தார். ஆளுநர் வருத்தம் தெரிவித்தும் அதை அந்த பெண் ஏற்கவில்லை. இதையடுத்து எஸ்வி சேகர் தனது பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளர்களை தரம் தாழ்த்தி பேசும் அளவுக்கு ஒரு பதிவை போட்டிருந்தார்.

    நீக்கம்

    நீக்கம்

    இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து அதை அவர் நீக்கிவிட்டார். பின்னர் அது தனது கருத்தல்ல என்றும் நண்பர் அனுப்பியதை நம்பி படிக்காமல் பார்வேடு செய்தேன் என்றும் எனது பதிவால் பத்திரிகை சகோதரிகளுக்கு மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்தார்.

    முற்றுகை

    முற்றுகை

    இதை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை. எஸ்வி சேகரின் வீட்டை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர் மீது நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இரு முறை முன்ஜாமீன் கேட்டும் அதை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் தலைமறைவாக இருந்தார்.

    வாடிக்கை

    வாடிக்கை

    மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தி. நகரில் கலந்து கொண்டார். பின்னர் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றிருந்தார். எப்போது வெளியில் போனாலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் செல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    உடல்நிலை சரியில்லை

    உடல்நிலை சரியில்லை

    எஸ்வி சேகரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று நீதிபதி கண்டனம் கூட தெரிவித்தார். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி. சேகருக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறி அவர் ஆஜராகவில்லை.

    எஸ் வி சேகருக்கு கண்டனம்

    எஸ் வி சேகருக்கு கண்டனம்

    இதனால் நீதிபதி சுப்பையா கடுங் கோபம் கொண்டார். எஸ் வி சேகர் ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் என்று எச்சரித்த நீதிபதி ஒழுங்காக விசாரணைக்கு வருவேன் என்று பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வரும் 20ஆம் தேதி எஸ் வி சேகர் ஆஜராகியே தீர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.ஆஜராகியே தீர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    English summary
    Karur Judge condemns S.Ve.Shekher for not appear in court in the issue of making derrogatory statement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X