For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பா எங்கே?.. கண்கள் விரிய உருக்கமாக தேடிய கஸ்தூரி மகாலிங்கம்!

தேர்வு எழுதிவிட்டு அப்பா எங்கே? என கண்கள் விரிய உருக்கமாக கஸ்தூரி மகாலிங்கம் தேடியது நெஞ்சை உருக்கியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வால் அப்பாவை இழந்த கஸ்தூரி மகாலிங்கம்-வீடியோ

    எர்ணாகுளம்: எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் அப்பா எங்கே? என தேடியது பார்ப்போர் மனதை பதற வைத்தது.

    திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி . அரசு ஊழியர். இவரது மகன் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

    Kasthuri Mahalingam asks where is his father?

    தமிழகத்தில் தேர்வு மையம் கேட்ட கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் பெரும் அவதிக்குள்ளாகி ஒரு வழியாக எர்ணாகுளம் வந்தடைந்தார் மகாலிங்கம்.

    இதையடுத்து ஒரு விடுதியில் தங்கியிருந்த அவர்கள் தனது மகனுக்கு நீட் தேர்வு விதிகளுக்கு பொருந்தும் வகையில் ஆடை எடுக்கவும் வெளியே சென்றிருந்தது தெரியவந்தது.

    Kasthuri Mahalingam asks where is his father?

    இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு எர்ணாகுளத்தில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் மகனை விட்டுவிட்டு விடுதியில் ஓய்வு எடுக்க சென்ற கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டார்.

    இதையடுத்து மதியம் 1 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த கஸ்தூரி மகாலிங்கம் , அப்பா எங்கே என கேட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டனர். இதையடுத்து போலீஸார் அந்த மாணவனை கிருஷ்ணசாமியின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றனர்.

    English summary
    Kasthuri Mahalingam searches his father after he writes Neet Exam. Kerala Police take him to the City hospital where his body kept.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X