For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்… ஏராளமானோர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஏராளமானோர் இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Katchatheevu Anthony temple festival begins today

கச்சத்தீவில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் விதமாக ஜாதி, மதம், மொழி வேறுபாடின்றி மதநல்லிணக்க விழாவாக கொண்டாடப்படுகிறது.

இன்று இரவு சிலைவழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை காலை திருவிழாவின் சிறப்பு திருப்பலி தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் நடைபெற உள்ளது.

ஒரே ஒரு போன் கால்.. அரசியலையே மாற்றியது.. ராகுல் காந்தியின் கூட்டணி கனவில் விளையாடிய ஈகோ பிரச்சனை! ஒரே ஒரு போன் கால்.. அரசியலையே மாற்றியது.. ராகுல் காந்தியின் கூட்டணி கனவில் விளையாடிய ஈகோ பிரச்சனை!

கச்சத் தீவில் இன்று துவங்க உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்காக இருநாட்டு கடற்படை நிதி உதவியோடு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 2530 பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று அதிகாலை 5 மணி முதல் தமிழகத்தில் இருந்து 65 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்களில் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெறுகிறது .

English summary
Katchatheevu Anthony Temple Festival Begins Today with Flag Hoisting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X