For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய, இலங்கை உறவை வலுப்படுத்தும் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா தொடங்கியது!

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கச்சத்தீவு: இந்திய இலங்கை மக்களை இணைக்கும் வகையிலும், சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் கொண்டாடப்படும் கச்சத்தீவு புனிதஅந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கச்சத்தீவில் தமிழர்களுக்கு உரிய உரிமையை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் நீண்ட நாட்களாக கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட படகில் தமிழக மக்கள் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்றும் நாளையும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட கொடி மரம் கச்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டது. பங்குத்தந்தைகளின் சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு கொடியேற்றம் நடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு புறக்கணிப்பு

கடந்த ஆண்டு புறக்கணிப்பு

கொடியேற்றத்துடன் திருப்பலியும் கச்சத்தீவு திருவிழாவில் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி முழுவதும் தடைபட்டது, தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கவில்லை.

2,100 பேர் பங்கேற்பு

2,100 பேர் பங்கேற்பு

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 62 படகுகளில் 2 ஆயிரத்து 100 மீனவர்களும், இலங்கையில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்களும், பக்தர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று திருப்பள்ளி திருவிழாவைத் தொடர்ந்து தேரோட்டம், சிலுவைப் பாதை உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

சகோதரத்தவம் மேம்பட

சகோதரத்தவம் மேம்பட

இந்திய இலங்கை மக்கள் இடையே புரிந்துணர்வை கொண்டு வரும் கச்சத்தீவு திருவிழா நடைபெறுகிறது. இரு நாட்டு மக்களும் சேர்ந்து கொண்டாடும் திருவிழா சமத்துவத்தை ஏற்படுத்தும் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. ராமேஸ்வரம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இரு நாட்டு மீனவர்களும் நல்லுறவை பேணும் வழிபாடாக இந்த திருவிழா அமைய வேண்டும் என்றே இரு நாட்டவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு அந்தோணியார் கோயிலின் முக்கிய திருவிழா நாளை நடைபெறுகிறது.

நாளை முக்கிய திருவிழா

நாளை முக்கிய திருவிழா

கச்சத்தீவு திருவிழா இதுவரை பழைய தேவாலயத்தில் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள அந்தோணியார் கோவிலில் நடைபெற்று வருகிறது. பழைய தேவாலயம் இடிக்கப்படாமல் அதற்கு அருகிலேயே புதிய அந்தோணியார் கோயில் கட்டப்பட்டுள்ளது. நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பங்கு தந்தைகள் நாளை திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

English summary
About 2,100 pilgrims from Tamil Nadu participated at Katchatheevu St Anthony's church festival, which would started with flag hoisting today evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X