For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வரும் வாரங்களில் அனல் பறக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. வரும் நாட்களி்ல் கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இன்று கத்திரி தொடங்கியுள்ளது. மே 28ம் தேதி வரை இது நீடிக்கும்.

இன்று கத்திரி தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் சின்னதாக ஒரு நல்ல மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதலைடந்துள்ளனர். இதேபோல அவ்வப்போது மழை பெய்து வந்தால் கத்திரியின் கொடுமையிலிருந்து தப்பி விடலாம் என்பது அவர்களது எண்ணம்..

கோடை காலம்

கோடை காலம்

தமிழகத்தில் கோடை காலம் ஏற்கனவே சூடு பிடித்து விட்டது. ஜூன் மாதம் வரை வெயில் வெளுத்தெடுக்கும்.

ஏன் வெயில் ஜாஸ்தியா இருக்கும்

ஏன் வெயில் ஜாஸ்தியா இருக்கும்

சித்திரை, வைகாசி மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களில் பூமிக்கு அருகில் சூரியன் வருவதால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இதைத்தான் அக்னி நட்சத்திர காலம் என்கிறார்கள்.

ஒரு மாதமாகவே கடும் வெயில்

ஒரு மாதமாகவே கடும் வெயில்

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே கடும் வெயில் அடித்து வருகிறது. திருச்சி, வேலூரில் அதிகபட்சம் 107 டிகிரி வெப்பம் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 103 டிகிரி வெப்பம் இருந்து வருகிறது.

சித்திரையில் அனல் பறக்கும்

சித்திரையில் அனல் பறக்கும்

இந்த நிலையில் இன்று தொடங்கியுள்ள அக்னிநட்சத்திரம் காரணமா கடும் வெப்பம் இருக்கும்.

3வது வாரம் வரை தலை காட்டாதீங்க..

3வது வாரம் வரை தலை காட்டாதீங்க..

அக்னிநட்சத்திரத்தின் முதல் வாரத்தில் கடும் வெப்பம் காணப்படும். 2-ஆவது வாரத்தில் இன்னும் கடுமையாக இருக்கும். 3-ஆவது வாரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கும்.

English summary
The hot 'Kathiri' season has begun in Tamil Nadu as the summer season is all set to scorch the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X