For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களே உஷார்.. மே 4ஆம் தேதி தொடங்குகிறதாம் கத்திரி வெயில்!

தமிழகத்தில் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கூடவே அனல் காற்றும் வீசுவதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

கொளுத்தும் வெயிலால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

கோடை மழை

கோடை மழை

வேலூர், திருச்சி, சேலம் என பல இடங்களில் இப்போதே வெயில் சதமடித்து வருகிறது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது பலத்த சூறைக்காற்றுடன் கோடை மழையும் பெய்து வருகிறது.

மே 4ஆம் தேதி கத்திரி

மே 4ஆம் தேதி கத்திரி

இந்நிலையில் தமிழகத்தில் கத்திரி வெயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வெப்பக்காற்று வீச உள்ளதால், வேலூா், சேலம், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பசலனம்

வெப்பசலனம்

இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் திசைமாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன்

பலத்த காற்றுடன்

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

English summary
Chennai meteorological center says Kathri Veyil will be started on Coming 4th of May. For nexr two days 8 districts of Tamil nadu will be hot said met department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X