For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. 'கவிக்கோ' அப்துல் ரகுமான் காலமானார்

மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை பனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை பனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.

'Kaviko' Abdul Rahman no more

'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள்.
கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர்.

1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார்.

இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார்.

English summary
One of the leading Tamil poet 'Kaviko' Abdul Rahman no more. He was 80 year of age.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X