For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஆடி சேல் ஒஸ்தியான சேல்” விளம்பரங்களும் தமிழ்க் கொலையும்....

By Mathi
Google Oneindia Tamil News

- கவிஞர் மகுடேஸ்வரன்

"ஆடி சேல் ஒஸ்தியான சேல்" என்று ஒரு விளம்பரம் கடந்த நாள்களில் ஒலித்தது. இதில் பாருங்கள், நான்குக்கு மூன்று தமிழல்லாத சொற்கள்.

சேல் என்பது தமிழில் ஈவிரக்கமில்லாது கலந்துவிட்ட ஆங்கிலச் சொல். அந்தக் கலப்பை விளங்கிக்கொள்ள முடிகிறது. அதை 'விற்பனை' என்று மாற்றுவதும் நம் நோக்கம்.

ஆனால், ஒஸ்தி என்ற சொல் இருக்கிறதே அதுதான் இங்கே அண்மையில் நிகழ்ந்த கலப்பு.

ஒஸ்தி என்று ஒரு திரைப்படம் வந்ததால் "அதுவும் தமிழில் வழங்கும் சொல்தான் போல" என்று கலந்துவிட்டார்கள். ஒசத்தி என்பதைத்தான் ஒஸ்தி என்ற சொல் குறிப்பிடுவதாக எளியவர்கள் நினைப்பார்கள்.

எளியோரை இலக்காக்கிச் செய்யப்படும் விளம்பரங்களில் அத்தகைய சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.

Kavingar Magudeswaran on

ஒஸ்தி என்பது ஒசத்தி என்ற சொல்லா ? இல்லை. ஒசத்தி என்ற சொல் 'உயர்த்தி' என்பதன் கொச்சை வழக்கு.

உ என்னும் ஒலிப்பு பேச்சில் 'ஒ' என்று மாறும். உலகம், உனக்கு என்பவை பேச்சுவழக்கில் 'ஒலகம், ஒனக்கு' என்றே வழங்கும். அவ்வாறே யகரம் பேச்சு வழக்கில் சகரமாகும். முயல் மொசல், அயல் அசல் என்றாவது இப்படித்தான்.

'உயர்+தி = உயர்த்தி' என்னும் தொழிற்பெயர் 'உசத்தி => ஒசத்தி' என்று பேச்சு வழக்கில் வழங்கப்படுவது. (உயர்த்து+இ என்றும் கருதலாம்).

'ஆடி சேல் ஒசத்தியான சேல்' என்று அத்தொடர் இருந்திருக்குமானால் நான்குக்கு இரண்டு தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றிருக்கும்.

தமிழல்லாத தலைப்போடு வந்த ஒரு வணிகத் திரைப்படம் பயன்பாட்டில் இருந்த ஒரு தமிழ்ச்சொல்லுக்குக் கோடரியாக அமைந்து, அச்சொல் நீங்குவதற்குக் காரணமாகிவிட்டது. ஒசத்தியை நீக்கிவிட்டது.

இதனால்தான் திரைப்படங்களும் இதழ்களும் தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் தமிழ்ச்சொற்களை ஆள்வதில் உயிர்ப்போடும் ஊக்கத்தோடும் இருக்கவேண்டுமென்று திரும்ப திரும்ப உரக்கச் சொல்கிறோம்.

வானொலிப் பண்பலை வரிசையினர்தாம் இக்கேட்டை விளைவிப்பதில் முதலிடத்தில் இருக்கின்றனர் என்றே கூறலாம்.

Kavingar Magudeswaran on

நீங்கள் அறிந்தோ அறியாமலோ செய்கின்ற 'சிறு தவறு' ஒரு தமிழ்ச்சொல்லின் இருப்பை அழிக்கிறது. உணர்ந்து திருந்துக !

பின்குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள விளம்பரத்தில் மொத்தம் 17 சொற்கள் உள்ளன. அவற்றில் ஐந்து சொற்கள்தாம் தமிழ்.

அவை: சென்னை, ஆடி, ஆன, முதல், வரை. தமிழ்க்கேடு எந்நிலைவரை வளர்ந்திருக்கிறது என்பதை உணர இதுவொரு சான்று.

English summary
Here the Kavingar Magudeswaran's FB post on "Aadi Sales" Advts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X