For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீழடி.. வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்- தமிழ், ஆங்கிலத்தில் முழு அறிக்கை இங்கே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Keezhadi excavations| நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்... கீழடி ஆய்வுகள்

    சென்னை: சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை.. இந்த மண்ணில் வாழ்ந்த ஆதி தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை சரித்திர சாட்சிகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி.

    சங்க இலக்கியம் என்பது கிமு 3-ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 3-ம் நூற்றாண்டு வரை என்கிற வரையறை உண்டு. அதையெல்லாம் தகர்த்து கிமு 6-ம் ஆண்டு வரை நகர்த்திச் சென்றிருக்கிறது கீழடி ஆய்வு முடிவுகள்.

    keeladi- Urban Settlement of Sangam Age on banks of river Vaigai

    கங்கை நதிக்கரையில் நகர நாகரிகம் என்பது தோற்றம் பெற்ற காலம் கிமு 3-ம் நூற்றாண்டு. ஆனால் தமிழர்கள் அந்த கிமு 3-ம் நூற்றாண்டில் நகர நாகரிகத்தின் உச்சகட்ட வாழ்வியலை வாழ்ந்தவர்கள் என்பதை கீழடியின் ஒவ்வொரு தடமும் திசையெங்கும் குவிந்து கிடக்கும் ஓராயிரம் சான்றுகள் பெருமிதத்துடன் பதிவு செய்திருக்கின்றன.

    கீழடியின் அகழாய்வு முடிவுகளை "கீழடி..வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்" என்ற தலைப்பில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆய்வு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. கீழடி ஆய்வு முடிவுகள் எப்படியெல்லாம் தொழில்நுட்ப ரீதியாக விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டன என்பதை உலகுக்கு பிரகடனம் செய்யும் பேராவணம் அது.

    தமிழர்கள் தங்களது வாழ்வில் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அந்த பெரும் ஆவணத்தை நீங்களும் முழுமையாக படியுங்கள்:

    தமிழ்: கீழடி- வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்

    ஆங்கிலம்: keeladi An Urban Settlement of Sangam Age on the banks of river Vaigai

    English summary
    Here is the Tamil, English Documents of keeladi An Urban Settlement of Sangam Age on the banks of river Vaigai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X