For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ அதிகாரி முகுந்த் குடும்பத்தினருக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேரில் ஆறுதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி முகுந்த் குடும்பத்தினருக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

கடந்த 26ம்தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தார். காஷ்மீரிலிருந்து தனி விமானம் மூலம் அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

Kerala Chief Minister Oommen Chandy pays respects to the family of Mukund

தாம்பரம் சேலையூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட முகுந்த் உடல், நேற்று காலை பெசன்ட்நகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 42 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனிப்பட்ட பயணமாக சென்னை வந்திருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று மாலை தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரி முகுந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து உம்மன் சாண்டி கூறுகையில, முகுந்த் எனது குடும்ப நண்பர். எனவே அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன் என்றார்.

English summary
Kerala Chief Minister Oommen Chandy, who arrived in Chennai on a personal visit on Monday evening, paid his respects to the family of slain Army officer Major Mukund Varadarajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X