For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவர்தான் முதல்வர்...!

சென்னையில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த கேரள மாணவிக்கு தேவையான உதவிகளை மின்னல் வேகத்தில் செய்து கொடுத்துள்ளார் அம்மாநில முதல்வர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை : கொல்லத்தை சேர்ந்த ஏழை மாணவி ரேவதிக்கு சென்னையில் மருத்துவம் பயில இடம் கிடைத்தும் சேருவதற்கு இடையூறாக இருந்த தடைகளை நீக்கி முதல்வர் பினராயி விஜயன் உதவி புரிந்து, ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்.

கொல்லம் அருகே உள்ள எலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு- ராதாமணி. இவர்களின் மகள் ரேவதி. ஏழை மாணவியான இவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தார். இதைத் தொடர்ந்து நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்றார்.

இதில் அவருக்கு சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

 நேர்முக தேர்வு

நேர்முக தேர்வு

இதைத் தொடர்ந்து அவர் தனது பெற்றோருடன் நேர்முகத் தேர்வுக்காக வியாழக்கிழமை சென்னை வந்திருந்தார். அப்போது ரேவதியின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் தகுதிச் சான்றிதழும், ஜாதி சான்றிதழும் இல்லை.

 அதிகாரிகள் ஏற்க மறுப்பு

அதிகாரிகள் ஏற்க மறுப்பு

இந்த சான்றிதழ்களை அடுத்த முறை வரும் போது கொண்டுவருவதாக ரேவதியின் பெற்றோர் கூறினர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மருத்துவ சேர்க்கைக்கு வெள்ளிக்கிழமை தான் கடைசி நாள் என்பதால் ரேவதியின் பெற்றோர் கூறுவதை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்றும் அவர் மருத்துவம் படிக்க இயலாத நிலை உருவானது. இந்த ஏழை மாணவி படிப்பதற்காக கேரள மாநிலத்தின் முந்திர உற்பத்தி நிறுவனத் தலைவர் ஜெயமோகன் தேவையான நிதியுதவிகளை செய்தார்.

 முதல்வருக்கு தகவல்

முதல்வருக்கு தகவல்

இதைத் தொடர்ந்து ரேவதியின் பெற்றோர் ஜெயமோகனை தொடர்பு கொண்டு சான்றிதழ் குறித்த விவரங்களை தெரிவித்தனர். இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வரும் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ படிப்புக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் ஒப்படைக்கப்படும் என்ரு மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு முதல்வர் சார்பில் மாநில அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

 மாணவி கல்லூரியில் சேர்ந்தார்

மாணவி கல்லூரியில் சேர்ந்தார்

இதைத் தொடர்ந்து அந்த மாணவி ரேவதி மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். மாணவியின் நிலை அறிந்த தக்க நேரத்தில் உதவிய முதல்வர் பினராயி விஜயனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இவர்தான் முதல்வர்...!

English summary
Pinarayi directly intervened to remove the obstacles before the student for Revati's medical admission to a Chennai college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X