For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா வெள்ளம்: மக்களுக்கு எப்படி எல்லாம் உதவலாம்.. அரசு உருவாக்கி உள்ள வழிகள்!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் கேரளா மக்களுக்கு உதவ பல வகையான ஏற்பாடுகள் கேரளா அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் கேரளா மக்களுக்கு உதவ பல வகையான ஏற்பாடுகள் கேரளா அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நம் இந்திய நாட்டிலே இயற்கை எழில் பொங்கும் அழகிய மாநிலம் கேரளா தான். அதனால் தான் அதை கடவுளின் நகரம் என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட பெருமைக்கு பேர் போன கேரளா தற்போது இயற்கையின் கோபத்தை சந்தித்து வருகிறது. தற்போது கொட்டித் தீர்த்த கனமழையால் அங்கு எங்கு பார்த்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Kerala Floods: Ways to help people in Gods Own Country

கிட்டத்தட்ட 13 க்கும் மேற்பட்ட பெரும்பாலான மாவட்டங்கள் தண்ணீரில் மீள முடியாத அளவு மிதந்து கொண்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 19,500 கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 100 ஆண்டுகளில் பெய்த மழையை காட்டிலும் மிகுந்த கொடூரமான பாதிப்பை தற்போது கேரளா மாநிலம் கண்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பது ஒரு பக்கம் என்றால் ஏராளமான மக்கள் உணவு, மின்சாரம் போன்றவை இல்லாமலும் தவித்து வருகின்றனர். குடியிருப்புகளை சுற்றி மழை நீர் சூழ்ந்தது மட்டுமில்லாமல் முதல் தளம் முழுவதும் தண்ணீரால் மூழ்கிவிட்டது. மக்கள் வேறு வழி இல்லாமல் உயரமான பகுதிகளுக்கு சென்று அங்கேயே ரொம்ப நேரம் காத்து கிடக்கும் பரிதாப நிலை அங்கு உருவாகியுள்ளது.

இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் இன்னும் நீர் மட்டம் உயரும் என்று அங்குள்ள உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆபிரகாம் கூறுகிறார். இதனால் நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. சிவப்பு அபாய எச்சரிக்கையை நோக்கி கேரளா நகரப் போய்கிறது என்பது கவலைக்கிடும் விஷயமாக எல்லோர் மனதிலும் நிலவி வருகிறது. ஏராளமான உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெரும் பிரச்சினைக்கு நடுவில் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளார். வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவியும் மற்றும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வெள்ளத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வரை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கண்டிப்பாக இந்த அறிக்கை வறுமையில் வாடும் குடிமக்களுக்கு போய் சேரும் என்று நம்பலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் கேரளாவில் கிட்டத்தட்ட 1. 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் தங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி தங்கள் உயிரை நீத்துள்ளனர் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் உள்ள மலப்புரம் மற்றும் இடுக்கி பகுதிகளில் கிட்டத்தட்ட 2000 க்கும் அதிகமான வீடுகள் நிலச்சரிவால் சரிந்து விழுந்துள்ளன. மேலும் இந்த வெள்ளத்தால் கொச்சி விமான நிலையத்தின் பயண போக்குவரத்து ஆகஸ்ட் 26 வரை தடை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 35 க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

நிறைய மக்கள் தங்கள் நிலையை இணையத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர். ஏன் செங்கன்னூர் பகுதியில் இருந்து கூட ஒரு நபர் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு தன் நிலையை வீடியோ மூலம் மக்களுக்கு இணையத்தில் தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் ஆலப்புழாவில் நிறைய மக்கள் உணவு, மின்சாரம் என்று எதுவும் இல்லாமல் தவித்து வருவதை படம் பிடித்து வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளார்.

இது எல்லாம் உங்களுக்கான ஓரிரு உதாரணங்கள் தான். இன்னும் இது போல் ஆயிரம் ஆயிரமாக மக்கள் தங்கள் நிலைமையை எப்படி கூறுவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். நம்பிக்கையுடன் போராடி வருகின்றனர். இந்த ஒரு நிகழ்வே போதும் இயற்கை நம்மளை காட்டிலும் மிகப்பெரிய சக்தி என்பதற்கு. இயற்கை பேரழிவு என்பது எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க இதுவே சரியான நேரம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை பறைசாற்ற வேண்டும். வெறும் வாய் மொழி பேச்சு இல்லாமல் செயலில் காட்ட இறங்க வேண்டும். அதற்கு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து செயல்பட நாம் முன்வர வேண்டும். உங்களின் ஒவ்வொரு உதவியும் நாடி ஒவ்வொரு உயிரும் அங்கே காத்து கிடக்கிறது. நம்மால் முடிந்த நிவாரண உதவியை அளிப்பதே நாம் நாட்டுக்கு செய்யும் முதல் கடமையாகும். உங்களின் ஒரு சிறிய ஆதரவு அங்கே ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டு எடுக்கப் போகிறது. நம்முடைய சிறு உதவி பெரு வெள்ளத்திற்கு முன் எந்த இயற்கை வெள்ளமும் காணாமல் போகும் என்பதை நாம் காட்ட வேண்டும்.

நீங்கள் உதவ விரும்புகிறீர்கள் என்றால் கேரளா முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி மூலம் இணையத்தில் உங்கள் பங்களிப்பை அளிக்க முடியும்.

இணைய வழி உதவியை தவிர மற்ற வழியில் உதவ:

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவியாக உடைகள், உணவுப் பொருட்கள், சானட்ரி நாப்கின், சமைக்கும் பாத்திரங்கள், பயிறு வகைகள், படுக்கை விரிப்புகள் என்று அத்தியாவசியமான பொருட்களைக் கூட அளிக்க நீங்கள் முன்வரலாம். அமேசான் நிறுவனம் கூட கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக தன் பங்களிப்பை கொடுக்கிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை நீங்கள் இதன் மூலம் அனுப்பி வைக்கலாம்.

பிரபல கூகுல் நிறுவனமும் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக தன் சேவையை தொடங்கி உள்ளது. கேரளாவில் உள்ள உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினரை கண்டறிய உதவும் சேவையை நமக்கு வழங்கியுள்ளது. எனவே இங்கே உதவியை பெறலாம்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஹெல்ப்லைன் எண்கள் :

  • காசர்காட்: 9446601700
  • கண்ணூர்: 91-944-668-2300
  • கோழிக்கோடு: 91-944-653-8900
  • வயநாடு: 91-807-840-9770
  • மலப்புரம்: 91-938-346-3212
  • மலப்புரம்: 91-938-346-4212
  • திரிசூர்: 91-944-707-4424
  • திரிசூர்: 91-487-236-3424
  • பாலக்காடு: 91-830-180-3282
  • எர்னாகுளம்: 91-790-220-0400
  • எர்னாகுளம்: 91-790-220-0300
  • ஆலப்புழா: 91-477-223-8630
  • ஆலப்புழா: 91-949-500-3630
  • ஆலப்புழா: 91-949-500-3640
  • இடுக்கி : 91-906-156-6111
  • இடுக்கி: 91-938-346-3036
  • கோட்டயம்: 91-944-656-2236
  • பத்தனம்தித்தா :91-807-880-8915
  • கொல்லம்: 91-944-767-7800
  • திருவனந்தபுரம்: 91-949-771-1281

உங்களின் அவசர உதவியை நாடி கேரளா மக்கள் உள்ளார்கள். உதவி செய்வோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். மனித நேயத்துடன் ஒன்றாக இணைந்து மீட்டெடுப்போம் நம் கேரளா நகரை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்வோம்.
வாருங்கள் உதவி செய்ய ஒன்று திரள்வோம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X