For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டை: தமிழக எல்லையில் தங்கும் விடுதிகளை திறந்து வைத்த கேரள அமைச்சர்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: செந்தூரணி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ரூபாய் 1.70 கோடி செலவில் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளை கேரள அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கேரள மாநிலம் தென்மலையில் கேரளா அரசு இப்பகுதி இயற்கை எழில் சூழ்ந்த பகுதி களை மேம்படுத்தி அங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் வண்ணம் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

Kerala forest tourist accommodations open by minister

தென்மலையில் உள்ள கல்லடா நீர்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் பாதாகுவசதி,வனப்பகுதியில் உள்ள செந்தூரணி ஆற்றின் குறுக்கே கயிற்றுபாலத்தில் நடப்பது, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவது, இசைக்கு வண்ண விளக்குகள் நாட்டியமாடுதல் என எராளமான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாத் திட்டங்கள்:

அது போக பல்வேறு வசதிகள் இங்கு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மதங்களுக்கு முன்பு ரூபாய் 1.70கோடி செலவில் செந்தூரணி வனப்பகுதியில் மட்டுமின்றி தென்மலையில் இருந்து ஆரியங்காவு ரோஸ் மலை வரை தனி வாகனத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றுலாத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓய்வு விடுதிகள் அமைப்பு:

இடி முழங்கான் பாறை,ரோச் உட் ,ரோஸ் மலை, குறுந்தொடர் வளைவு,கடங் குன்னு ஓய்வு இல்லம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் செந்தூரணி வனத்துறை சார்பில் கட்டப் பட்டுள்ள விடுதிகள் என இந்தப் பகுதியே சுற்றுலா தளமாக மாற்றப்பட்டு வருகிறது. இத்தலம் சுற்றுலா தளத்திற்கான குவியப்புள்ளியாக விளங்குகிறது. சூழ்நிலை சுற்றுலா இப்பகுதியிலுள்ள வனங்களின் சுற்றுப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா மேம்பாடு:

செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தினுள் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து வரும் நீரினால் இங்குள்ள நீர்நிலைகள் உருவாகியுள்ளது. இச்சரணாலயம் சூழ்நிலை சுற்றுலாவை மேம்படுத்தும் அனைத்து வளர்ச்சி வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. மேலும் தென்மலையை சுற்றி 50 கிமீ சுற்று புறங்களில் சூழ்நிலை சுற்றுலா மையங்கள் உருவாகியுள்ளது.

Kerala forest tourist accommodations open by minister

கேரள அரசின் முக்கிய திட்டம்:

சூழ்நிலை சுற்றுலா வழியாக தென்மலை பகுதியை மேம்படுத்தும் கேரள அரசின் இது ஒரு முக்கியமான திட்டமாகும். தென்மலையில் சூழ்நிலை சுற்றுலாவை வழக்கத்தில் கொண்டுள்ள இத்தலத்தின் வளர்ச்சி கடுமையான சூழ்நிலை விதிகளை அடிப்படையாக கொண்டது. இரவு நேரங்களில் டெண்டுகலிலும், மரக்கிளைகளிலும்,குகைகளிலும், வனத்தின் உள்பகுதியில் தங்கும்போது சுற்று சூழல் பாதிக்கப்படாத வண்ணம் கவனத்தில் கொள்ளப்படும்.

புதிய பரிமாணம்:

மேலும் சூழ்நிலை சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆதிவாசிகளும், உள்ளூர்வாசிகளும் வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது இச்சூழ்நிலை சுற்றுலா மையங்களுக்கும், அதை சார்ந்த இடங்களுக்கும் தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிறது.

குடில்கள் அமைப்பு:

சுற்றுசூழல் பதிவு, மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சிகள் இந்த பகுதியில் நடைபெறுகிறது. சுற்றுலா செயல்பாடுகளின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் இங்குள்ள வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

துவக்க விழா நிகழ்ச்சி:

இதன் துவக்க விழா நேற்று அம்மாநில அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைப் பெற்றது.இவ்விழாவில் புனலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜீ ,ஊராட்சி மன்றதலைவர் ஜெகதாம்பாள் ,சைலஜா,வனத்துறை அதிகாரிகள் எஸ் கோரி,ஷாநவாஸ்,உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

English summary
Senjurani forest travelers accommodations open inside the forest by Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X