For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளச்சல் துறைமுக திட்டத்துக்கு கேரளா எதிர்ப்பு... கட்சி கடந்து கச்சை கட்டுகிறார்களாம்!!

By Mathi
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது கேரளா. இது தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கேரளா எதிர்ப்பு

கேரளா எதிர்ப்பு

ஆனால் இந்த திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குளச்சல் துறைமுகத்தால் விழிஞ்ஞத்தில் தாங்கள் அமைத்து வரும் துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகிறது கேரளா. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளது.

விழிஞ்ஞத்துக்கு பாதிப்பு

விழிஞ்ஞத்துக்கு பாதிப்பு

இனயத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள விழிஞ்ஞத்தில் ரூ.7 ஆயிரத்து 525 கோடியில் அதானி குழுமம் துறைமுகம் அமைத்து வருகிறது. இந்த நிலையில் கேரள சட்டசபையில் குளச்சல் துறைமுக பிரச்சினையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.வின்சென்ட் எழுப்பினார்.

சதி இருக்கிறதாம்

சதி இருக்கிறதாம்

சட்டசபையில் வின்செட் பேசுகையில், விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில், குளச்சல் துறைமுகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டமிட்ட செயல் என்றார்.

விழிஞ்ஞத்துக்கு சாவுமணி

விழிஞ்ஞத்துக்கு சாவுமணி

மேலும் மத்திய அரசின் சகர்மலா திட்டத்தின் கீழ் குளச்சல் துறைமுகம் வருவதாக கூறிய வின்சென்ட், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு அடிக்கப்போகும் சாவு மணியே குளச்சல் துறைமுகம்; இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பினராயி விஜயன் பதில்

பினராயி விஜயன் பதில்

இதற்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு நெறியற்ற முறையில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்துக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை விட அதிக அளவு நிதியும் தேவைப்படுகிறது. விழிஞ்ஞத்தில் இருந்து வெறும் 30 கி.மீ. தொலைவில் சாத்தியப்படுத்த முடியாத மற்றொரு துறைமுகம் அமைப்பது விஞ்ஞானப்பூர்வமற்றது. பொதுமக்களின் வரிப்பணத்தை இது போன்ற முரண்பாடற்ற வழிகளில் செலவழிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.

எம்.பி.க்கள் கூட்டம்

எம்.பி.க்கள் கூட்டம்

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கேரள எம்.பி.க்கள் நாளை ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்து ஆலோசனை நடத்துவர். அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி அவர்கள் நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை எழுப்புவார்கள் என்றார்.

கட்சி கடந்து கச்சை கட்டுகிறார்களாம்!

English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan said he would meet Prime Minister Narendra Modi to express the state's concern over the Centre's in-principle nod to the Colachel port project in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X