For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை விபத்துகளில் அதிக பலி: டெல்லிக்கு முதலிடம், சென்னைக்கு 2வது இடம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சாலையில் நடந்து செல்பவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாததால் இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்துகளில் மக்கள் அதிக அளவில் பலியாகும் நகரங்களில் பெங்களூரை சென்னை முந்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு 1.37 லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் 10 ஆயிரத்து 444 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

Killer roads: Chennai records second highest road casualties in India, says WHO

அதில் பெங்களூரில் மட்டும் 729 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் அதிகமானோர் பலியான மாநிலங்களில் கர்நாடகா 4வது இடத்திலும், நகரங்கள் பட்டியலில் பெங்களூர் 4வது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் 43 ஆயிரத்து 694 சாலை விபத்துகள் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்ட விபத்துகளில் 13 சதவீதம் பெங்களூரில் நடந்ததாகவும், பலியானவர்களில் 9 சதவீதம் பேர் பெங்களூரில் பலியானதாகவும் பெங்களூர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த 5 ஆயிரத்து 4 விபத்துகளில் 4 ஆயிரத்து 98 பேர் காயம் அடைந்துள்ளனர். நகரங்களில் டெல்லியில் தான் அதிகபட்சமாக 1,332 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர். டெல்லியை அடுத்து சென்னையில் 1,046 பேரும், ஜெய்பூரில் 844 பேரும் பலியாகியுள்ளனர்.

English summary
According to WHO report, Chennai records second highest casualties among the cities in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X