For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அறிவிப்பில் 'கிஷான் கிரெடிட் கார்டுகள்'-அப்படி ஒரு கார்டு இருக்கா? குமுறும் தமிழக விவசாயிகள்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் புத்தாண்டு அறிவிப்புகளில் 'கிஷான் கார்டுகள்' பற்றிய நிறையவே பேசினார்... உண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கிஷான் கார்டுகள் என்ன என்றே தெரியாது என்கின்றனர் விவசாயிகள்.

நாட்டு மக்களுக்கு டிசம்பர் 31-ந் தேதியன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், அடுத்த 3 மாதங்களில் 3 கோடி விவசாய கிரெடிட் கார்டுகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும். இந்த கார்டுகளை விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் ஒரு அறிவிப்பு.

கிஷான் கார்டுகள்..

கிஷான் கார்டுகள்..

இது தொடர்பாக உங்களுக்கு கிஷான் கிரெடிட் கார்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறதா என நாம் விவசாயிகளிடம் கேட்டோம்... அப்படி ஒரு கார்டு இருப்பதே தங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். தமிழகத்தில் இந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதா? என்ற விவரமே இல்லை.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

கிஷான் கிரெடிட் கார்டு என்றால் என்ன என தெரியாமல் இருக்கின்றனர் விவசாயிகள்.. ஆனால் நாட்டின் பிரதமர் மோடியோ கிஷான் கிரெடிட் கார்டை வைத்து அடுத்த அறிவிப்பை வெளியிடுகிறார்.

கார்டுகளை கொடுங்க...

கார்டுகளை கொடுங்க...

ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இயல்பு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர் ஏழை, நடுத்தர மக்கள். இதை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டியது முதன்மை பணி. அதேபோல் கிஷான் கிரெடிட் கார்டுகள் நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்திருக்கிறதா? அதன் பலன்கள் என்ன என்று விவசாயிகளுக்கு தெரிவித்துவிட்டு, கார்டுகளை கொடுத்துவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

பலனில்லாமல் போகும்...

பலனில்லாமல் போகும்...

இல்லையெனில் எல்லாமே அறிவிப்பாகத்தான் தெரியும்.... எந்த ஒரு பலனும் ஏழை எளிய விவசாயிகளுக்கு கிடைக்காமலேயே போய்விடும்!

English summary
Tamilnadu farmers said that they yet to get Kisan Credit Cards which will be converted into RuPay Card within three months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X