For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடைக்கானல் போயிருக்கீங்களா.. அடுக்கம் வழியாக.. செருப்பு இல்லை, மதுவும் இல்லை.. அசத்தும் மக்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடைக்கானல் போயிருக்கீங்களா.. அடுக்கம் வழியாக.. செருப்பு இல்லை, மதுவும் இல்லை.. அசத்தும் மக்கள்!- வீடியோ

    கொடைக்கானல்: நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் சில கிராமங்களுக்கு பேருந்து வசதி என்பது இல்லை. பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள அடுக்கம் கிராமத்திற்கு இன்றுவரை பேருந்து வசதி கிடையாது. இந்த கிராமத்து மக்கள் தெய்வத்தின் உத்தரவுப்படி ஊருக்குள் யாருமே காலில் செருப்பு போடுவதில்லை. இதேபோல் யாருமே மது அருந்துவதும் கிடையாது.

    எல்லோருக்குமே மலை பிரதேசங்களில் பைக்கில் டிரெக்கிங் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படித்தான் எனக்கும் ஏற்பட்டது. சொந்த ஊரான தேனியில் இருந்து கொடைக்கானல் கூப்பிடும் தூரம் என்ற நிலையில் இந்த ஆசை இயல்பாக அடிக்கடி நிறைவேறும்.

    சரி விஷயத்துக்கு வருகிறேன். பொதுவாக எங்கள் தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு வழியாகத்தான் எங்கிருந்தாலும் கொடைக்கானல் செல்வதற்கு எளிதான வழி. ஆனால் அதேநேரம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாகவும் ஒரு பாதை உள்ளது.

    தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு

    கொடைக்கானல் பாதை

    கொடைக்கானல் பாதை

    பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி வழியாக சென்றால் மொத்தமே 40 கிலோமீட்டர் கூட வராது என்பதால் இந்த பாதையில் செல்வதையே விரும்புவோம். ஏனெனில் இயற்கை அளித்த பல அற்புத அருவிகள் கண் முன்னால் கடந்து செல்வதை பார்க்க முடியும். மிக ஆபத்தான் கொண்டை ஊசி வளைவுகளாக இருந்தாலும், நம்மை மயக்கும் மூலிகை வாசனங்கள் அடிக்கும். கண் முன்னே விரிந்து கிடக்கும் பசுமையான மரங்கள் மற்றும் விவசாய தோட்டங்கள் கண் அடித்து அழைக்கும்.

    செக்போஸ்ட் அனுமதி

    செக்போஸ்ட் அனுமதி

    அப்படித்தான் அண்மையில் கொடைக்கானலுக்கு நண்பனோடு பைக்கில் பெரியகுளத்தில் இருந்து சென்றேன். அடுக்கம் கிராமம் வழியாக செல்ல வேண்டும் என்பது தான் இலக்கு என்பதால் அந்த பாதையில் சென்றேன். சரியாக கும்பக்கரை அருவிக்கு ஒரு கிலோமீட்டருக்கு முன்பாக வாகனத்தை இடது புறம் திருப்பி பயணித்தேன். சில கிலோமீட்டர் தொலைவில் அங்கு செக்போஸ்ட் இருந்தது. அவர்கள் வெளியாட்கள் யாரையும் விட முடியாது என அனுமதி மறுத்தார்கள். ஆனால் நமக்கு தெரிந்த அடுக்கம் நண்பர் பெயரை சொன்னதும் உள்ளே விட்டார்கள். நேராக பயணித்தோம். மலை சாலைகள் மோசமாக இருந்தது நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு.. அதன்பின்னர் 8 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அழகான அடுக்கம் கிராமத்தை அடைந்தோம்.

    பறவைகள் ரீங்காரங்கள்

    பறவைகள் ரீங்காரங்கள்

    வழிநெடுகிலும் தண்ணீர் ஓடும் சத்தங்களும், பறவைகளின் ரீங்காரங்களும் கேட்டுக்கொண்டே இருந்தன. அந்த கிராமத்தில் நம்மை வரவேற்ற முதல் ஒன்றே தூரத்தில் தெரிந்த அருமையா அருவி தான். அப்படியே அருவிக்கான பார்வையை சிறிதாக்கி ஊரை உற்றுநோக்கினால் அங்கே வைக்கப்பட்டு இருந்த போர்டில், பனிரெண்டு சாமியின் உத்தரவுப்படி இங்கு யாரும் செருப்பு அணியக்கூடாது. மது அருந்தக்கூடாது என்று இருந்தது. என்னடா இது இந்த ஊரில் இப்படி ஓரு போர்டு என அங்கிருந்தவர்களை சுற்றி முற்றி பார்த்தால் யார் காலிலும் செருப்பு இல்லை. தலைக்கு மேல அவ்வையார் ஆரம்ப பாடசாலை நம்மை ஈர்த்தது. சிறுவயது நினைவுகள் வந்து போனது.

    மது அருந்தக்கூடாது

    மது அருந்தக்கூடாது

    சரி அப்படியே அருகே உள்ள தோட்டத்தில் இருந்து செருப்பை அணிந்த படி வந்தவர் ஊருக்குள் வந்தவுடன் செருப்பை எடுத்து வாகனத்தில் வைத்துக்கொண்டு புறப்பட முயன்றார். அவரை அப்படியே நில்லுங்க சார், எங்களுக்கு கொஞ்ச ஊர பத்தி சொல்லிட்ட போங்க..என அழைத்தோம். அவரும் நம்முடைய அழைப்பை ஏற்று, பேசினார் அவர் பெயர் அன்பரன, 12ம் வகுப்பு அக்ரி குரூப் படித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறாராம். அவர் நம்மிடம் கூறுகையில், பனிரெண்டு சாமியின் உத்தரவுப்படி இங்கு யாரும் செருப்பு அணிய மாட்டார்கள். யாரும் மது அருந்தமாட்டார்கள். எந்த கெட்ட பழக்கமும் எங்க கிராமத்து மக்கள் செய்யமாட்டார்கள்.

    வாழை விவசாயம்

    வாழை விவசாயம்

    பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் வரை எங்கள் ஊர் வழியாக பேருந்து வசதி செய்து கொடுத்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும். கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலை இந்த பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமம் தான். எங்கள் ஊரில் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றார். விவசாயத்தை தான் கிராமத்தினர் எல்லோரும் செய்வதாக கூறிய அன்பரசன், வாழையை பிரதானமாக பயிரிட்டுள்ளோம் என்றார்.அவகோடா உள்ளிட்ட பழங்கள் இங்கு நிறைய கிடைக்கும். இவற்றால் எங்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது என்றார். அவரிடம் அப்படியே நன்றி சொல்லிவிட்டு அப்படியே சாலையில் கொடைக்கானலுக்கு விரைந்தோம். மேலே செல்ல செல்ல, மெல்லிய மழைச்சாரலும், குளிரும் நம்மை இதமாக கொடைக்கானலுக்கு வரவேற்றன. அங்கிருந்த பிரிய மனம் இல்லாவிட்டாலும், மாலை மயங்கும் வேளையில் வீட்டுக்க இறங்கினோம்.

    எங்கள் ஊரில் கழிவறை வசதி பெரும்பாலான வீடுகளில் இல்லை. எங்களுக்கு அரசு கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

    English summary
    kodaikanal adukkam village people did not were chappell, did not drink alcohol, bus also not there, who drive tracking periyakulam to kodaikanal can see the adukkam village
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X