For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்.. நீங்கள்?.. அதிரடி வீடியோ வெளியிட்ட கோஹ்லி!

சாலை பாதுகாப்பு வாரம் பற்றி கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்.. நீங்கள்?

    சென்னை: சாலை பாதுகாப்பு வாரம் பற்றி கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன் நீங்களும் ஓட்ட வேண்டாம் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    ஒவ்வொரு வருடமும் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. அதில் சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு அளித்து வருகிறது. அதன்படி இந்த வாரம் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது.

    Kohli releases an awareness video about Drunk and Drive in Twitter

    இதில் ''சாலையில் வேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது கவனத்தைச் சிதறவிடும் செயல்களில் ஈடுபடக் கூடாது. நமக்கு முன்னால் செல்லும் வாகனத்தை மட்டும் கவனிக்காமல் அதற்கு முன்பும், நம்மைச் சுற்றிலும் கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். வலது புறம் இடது புறம் திரும்புகையில் மிகவும் எச்சரிக்கையுடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யாமலும் திரும்பவேண்டும்'' போன்ற அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

    அதேபோல் ''கார்களில் பயணிக்கும் போது வாகன ஓட்டியின் இருக்கை முடிந்தவரை முன்னே இருக்கவேண்டும். அருகில் செல்லும் வாகனங்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுடைய வேகத்தையும், செயல்பாட்டையும் கணிக்க வேண்டும், நமது வாகனத்தின் தன்மை வேகம் குறித்த கவனம் வேண்டும். இரவிலும், சோர்வாக இருக்கும் போதும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.'' என்று நிறைய அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாகிய இன்று இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியும் அதுபற்றி குரல் கொடுத்துள்ளார்.

    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ''இந்தியாவில் ஒருநாளைக்கு சாலை விபத்தில் 19 பேர் வீதம் மதுபானம் அருந்தி கொண்டு வாகனம் ஓட்டுவதால் மரணம் அடைகின்றனர். ஒரு வருடத்திற்கு இதனால் 6700 பேர் வீதமாக எண்ணிக்கை உயர்கிறது. அதனால் இனிமேல் நான் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்ட போவதில்லை. என்னுடன் நீங்களும் கைகோருங்கள்'' என்று கோஹ்லி வாக்குறுதி அளித்துள்ளார். அவரை பின்பற்றி நாமும் முடிந்த வரை சாலை விதிகளை மதித்து நடந்தால் நல்லதொரு பயணத்தை தொடரலாம்

    - பா. திவ்ய பாலா

    English summary
    Kohli releases an awareness video about Drunk and Drive in Twitter. He says that he won't drunk and drive, so he asked people to follow the same.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X