For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி !

By Karthikeyan
Google Oneindia Tamil News

கரூர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக கட்சியினர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே துவங்கிவிட்டனர்.

Kongunadu Makkal Desiya Katchi General Meeting at karur

பெரிய கட்சிகளுக்கு தொடர்ந்து கூட்டணி அழைப்பு விடுத்தும் அங்கிருந்து இன்னும் உறுதியான பதில் எதுவும் வரவில்லை என்பதால் சிறிய கட்சிகளுடனான கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தையில் இறங்கியது தமிழக பாஜக.

பாஜக முக்கிய தலைவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே), புதிய நீதி கட்சி (என்ஜேபி) போன்ற கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிறிய கட்சிகளின் ஆதரவை முதல் கட்டமாக திரட்டிவிட்டு பின்னர் கூட்டணிக்கு சிக்னல் தெரிவிக்கும் பெரிய கட்சியுடன் சேர்ந்து வலுவான ஒரு மெகா கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் தேர்தல் கூட்டணி கணக்கு.

இதன் ஒரு பகுதியாக பாஜக தலைவர்கள் கடந்த இருதினங்களுக்கு முன்னர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ஈஸ்வரனை சந்தித்து கூட்டணியில் தொடர்ந்து இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி புதிய கூட்டணியில் இடம்பெறும். மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது. பிரதான கட்சிகளுக்கும் மட்டுமே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியை விமர்சிப்பது சரியாக இருக்காது.2014 மக்களவை தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாய கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக எந்த ஆலோசனையும் செய்யவில்லை. இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.

English summary
Kongunadu Makkal Desiya Katchi General Secretary Eswaran said, our party withdrew from the NDA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X