For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. கொடநாடு எஸ்டேட் படுகொலை… கேரளாவில் கொலையாளி கைது.. தனிப்படை போலீசார் அதிரடி

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளியை கொன்ற கொலையாளியின் படத்தை கம்யூட்டர் மூலம் வரைந்து போலீசார் தேடி வந்த நிலையில், தனிப்படைப் போலீசார் கேரளாவில் கொலையாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

கோத்தகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் போது மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தக் கொலை குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை தேடி தனிப்படைகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டன.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

இதனை தொடர்ந்து, சம்பவ தினத்தன்று கொடநாடு பகுதிகளில் சுற்றித் திரிந்த சொகுசு கார்கள், வாகனங்கள் குறித்து கோத்தகிரி டானிங்டன், குஞ்சப்பனை சோதனைச் சாவடி பகுதிகளில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெட்ரோல் நிலையங்கள்

பெட்ரோல் நிலையங்கள்

மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பெட்ரோல் நிலையங்களில் காண்பித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியோடு கொலையாளியை தேடும் முயற்சி தீவிரம் அடைந்துள்ளது.

கிஷன்பகதூர்

கிஷன்பகதூர்

இது தவிர, படுகாயம் அடைந்துள்ள மற்றொரு காவலாளியான கிஷன்பகதூரை குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கம்யூட்டர் படம்

கம்யூட்டர் படம்

இப்படி படாதபாடுபட்டும் போலீசாரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், கொலையாளியால் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் கொடுத்த தகவலின் பேரில் கொலையாளியின் மாதிரி படத்தை கம்யூட்டர் மூலம் வரைந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் கொள்ளை

பொருட்கள் கொள்ளை

ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் அறைகளுக்கு கொலையாளிகள் சென்றுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். எனினும் பொருட்களும் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் டிஎஸ்பி தலைமையில் ஒரு குழுவினர் சென்னையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

ஒருவர் கைது

ஒருவர் கைது

இந்நிலையில், ஓம்பகதூரைக் கொன்ற கொலையாளி ஒருவரை கேரளாவில் தனிப்படைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கொடநாடு அழைத்து வரப்படுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
A man was arrested in Kotanad murder case in Kerala by police today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X