For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை கோவளத்தில் கடல் சீற்றம் – கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோவளத்தில் இன்று மாலை கடல் நீர் திடீரென்று ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அப்பகுதியில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது. இன்று காலை சென்னையில் பரவலாக மழை பெய்தது. மதிய வேளைக்கு மேல் வெயில் கொளுத்திய நிலையில் கோவளத்தில் இத்திடீர் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Kovalam sea side water turbulence today

கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் 2 மின்கம்பங்கள் அடியோடு சரிந்துள்ளன. மேலும், அப்பகுதியில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக நேபாளம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களையும், உலகில் கிட்டதட்ட 82 நாடுகளையும் நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் உலுக்கி வருகின்ற நிலையில் சென்னையில் சில இடங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் ஏற்கனவே மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திடீரென்று ஏற்பட்ட இக்கடல் சீற்றம் மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. சுனாமி குறித்த அச்சத்தினையும் விதைத்துள்ளது.

English summary
Chennai Kovalam area suddenly felt heavy waves and sea water logged inside the village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X