For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பராமரிப்பு இல்லை.. கிருஷ்ணகிரி அணையின் முக்கிய மதகு உடைந்தது.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

கிருஷ்ணகிரி கே. ஆர்.பி. அணையின் போதிய பராமரிப்பு இல்லாததால் அணையின் முக்கிய கதவு உடைந்து விட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் போதிய பராமரிப்பு இல்லாததால் அணையின் முக்கிய கதவு உடைந்துவிட்டது. இதனால் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடி தாண்டி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் கடலூர் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கடந்த 100 நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

Krishnagiri dam's penstock breaks out

மேலும் அணைக்கு தண்ணீர் வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று மாலை அணையின் பிரதான மதகின் முக்கிய கதவு உடைந்ததால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலுலும் அணையின் மதகுகள் முற்றிலும் உடையும் தருவாயில் இருப்பதால் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ளனர். மதகு உடைப்பெடுத்ததற்கு போதிய பராமரிப்பின்மையே காரணம் என்று கூறப்படுகிறது.

English summary
Krishnagiri Dam's main penstock breaks out. District Administration warns surrounding areas about flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X