கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இருவர் கைது - வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலுள்ள சிங்காரப்பேட்டை காப்புக்காட்டுக்குள் மானை வேட்டையாடிய இருவரை வன அலுவலர்கள் கைது செய்தனர். மான்கறி பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்காரப்பேட்டை காப்புக்காட்டுக்குள் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனச்சரகர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து வன அலுவலர் சங்கர் தலைமையில், வனச் சரகர்கள் காப்புக்காட்டுக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக்காட்டுக்குள் இருவர் இருசக்கர வாகனத்தில் பைகளுடன் வந்தனர். அவர்களை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறியதால் சந்தேகமடைந்து அவர்களை சோதனை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் காப்புக் காட்டுக்குள் மான்களை வேட்டையாடி அதன் மாமிசத்தை பைகளில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் இருவரையும் வன அலுவலர் கைது செய்தார். இதுகுறித்து அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.